விலைக்கு மேல் மேற்கொண்டு லாபத்தை கொடுத்து முன்னாள் கணவருடன் வாழ்ந்த பிராம்மாண்ட வீட்டை வாங்கியுள்ள சமந்தா.

0
166
samantha
- Advertisement -

முன்னாள் கணவருடன் வசித்த வீட்டை நடிகை சமந்தா வாங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வெளிவந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வலம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

சமந்தா நடித்த படங்கள்:

இதனால் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்ததற்கு பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும், பிரிவிற்கு பிறகு சமந்தா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இதைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், யசோதா, குஷி, ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் சமந்தா நடித்து வருகிறார். அதிலும் சமீபத்தில் சமந்தா நடித்து வரும் சாகுந்தலம் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தை குணசேகர் என்பவர் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தனியார் நிகழ்ச்சியில் சமந்தா:

இதனைத் தொடர்ந்து தற்போது சமந்தா இந்தியில் அதிக படங்களில் நடிப்பதற்கு தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சமந்தா, நடிகர் அக்ஷய் குமாருடன் கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் தன்னுடைய முன்னாள் கணவர் குறித்த கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். இந்த நிலையில் சமந்தா புதிய வீடு வாங்கியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சமந்தா வாங்கிய புது வீடு:

அதாவது, ஹைதராபாத்தில் நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்கு முன் ஒரு தனி வீட்டை வாங்கி வசித்து வந்து இருந்தார்கள். பின் அவர்களின் பிரிவின் போது அவர்கள் இருவரும் அந்த வீட்டை விற்று விட்டனர். தற்போது சமந்தா அதே வீட்டை பல முயற்சிகள் செய்து கூடுதலாக பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.

Advertisement