படத்திற்காக தனது சொந்த பெயரை மாற்றிய சமந்தா.! என்ன பெயர்னு பாருங்க.!

0
1065
- Advertisement -

நடிகை சமந்தா தற்போது பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ரகஸ்தலம்’ படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. மேலும், தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிய போதும் சமந்தாவின் நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் படங்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா, இந்நிலையில் தற்போது கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்கிராணி என்ற படத்தை தழுவிய ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் நடிகை சமந்தா என்று தகவல்கள் வெளியானது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தெலுங்கில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு ‘ஓ பேபி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை சமந்தாவும் இந்த படத்தின் ப்ரோமோஷன்களை இப்போதே துவங்கி விட்டார். அதன் முதல்கட்டமாக ட்விட்டரில் இதுவரை சமந்தா அக்கினி என்று இருந்த தனது பெயரை ‘ஓ பேபி’ படத்திற்காக பேபி சமந்தா என்று மாற்றியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement