முகம் சுழிக்கும் வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட விஜய் தேவர்கொண்டா – விலாசி தள்ளிய நெட்டிசன்கள். சப்பை கட்டு கட்டிய சமந்தா.

0
339
samantha
- Advertisement -

விஜய் தேவர்கொண்டாவின் liger படத்தின் போஸ்டருக்கு நடிகை சமந்தா பதிவிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவை படு வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா . தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர்.

-விளம்பரம்-

அதனை அடுத்து இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதிலும் அந்த படத்தில் இடம் பெற்ற “இன்கேம் இன்கேம் கவாளி” என்ற பாடல் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அணைத்து ரசிகர்களையும் ஈர்த்திருந்தது. மேலும், இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடுகிறது. தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : மாவரைக்க வந்த பெண்ணை நடிகையாக்கிய வினுசக்ரவர்த்தி – கொடி கட்டி பறந்த அந்த நடிகை யார் தெரியுமா ? (ரெண்டு பேரும் இப்போ இல்ல)

liger படம்:

தமிழில் கூட இவர் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய் தேவர்கொண்டா நடித்து இருக்கும் படம் ‘liger’. தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி வருகிறார். லைகர் படத்தில் குத்துச் சண்டை வீரர் என்ற கேரக்டரில் விஜய் தேவரகொண்ட நடிக்கிறார். மேலும், சர்வதேச புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டா டீவ்ட்:

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய் தேவர்கொண்டா அவர்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக கையில் பூங்கொத்து ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு இருக்கிறார். மேலும், விஜய் தேவர்கொண்டா இந்த புகைப்படத்தை தன்னுடைய டீவ்ட்டரில் பதிவிட்டு, என்னிடம் உள்ள எல்லாவற்றையும் லைகர் படம் எடுத்துக் கொண்டது. நடிப்பு,மனம் மற்றும் உடலளவில் மிகப்பெரும் சவாலை இந்த படம் ஏற்படுத்தியது என்று கூறியிருக்கிறார்.

சமந்தா பதிவு:

தற்போது விஜய் தேவர்கொண்டாவின் இந்த போஸ்டர் வெளியானது அடுத்து பலரும் கலவையான கமெண்டுகளை அளித்து வருகின்றன. மேலும், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகின் முன்னணி நடிகை சமந்தாவும் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், விஜய் தேவர்கொண்டாவிற்கு விதிகள் எல்லாம் தெரியும். அவற்றை உடைக்க தெரியும். ரொம்ப தைரியம் மற்றும் பெருமை என்று பதிவிட்டிருக்கிறார்.

குஷி படம்:

அது மட்டுமில்லாமல் சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவரும் சேர்ந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். சிவா நிர்வாணா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. மேலும், இந்த படம் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement