தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்பவர் சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழிகளில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சமந்தா அவர்கள் தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
பின் சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் என பல சர்ச்சைகள் எழுந்த வந்த நிலையில் இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளத்தில் இருவருமே அறிவித்து இருந்தனர். இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளது.
இதையும் பாருங்க : முதன் முறையாக தன் தந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட எஸ் ஜே சூர்யா – இறைவி படத்துல பாத்தா மாதிரியே இருக்காரே.
இதனால் சமந்தா அவர்கள் அதிகமான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். பின் இவர் தன்னுடைய தோழியுடன் சேர்ந்து ஆன்மிக சுற்றுலா சென்று இருந்தார். அதே போல விவகாரத்துக்கு கொஞ்சம் மாதங்கள் முன்பு தான் சினிமாவில் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்வதாக அறிவித்தார் சமந்தா.
ஆனால், விவாகரத்தை அறிவித்ததும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று ஜாலியாக இருந்து வரும் சமந்தா, சமீபத்தில் மழையை ரசித்தபடி ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விவகாரத்துக்கு பின்னர் நாக சைதன்யாவை விட சமந்தா தான் அதிகம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அதனால் முன்னாள் கணவரை வெறுப்பேற்ற தான் சுமந்தா இப்படி தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறாரா என்பது தெரியவில்லை.