ராஜாக்கண்ணு மனைவிக்கு வீடு கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ், இப்போ சூர்யா செய்துள்ள பேருதவி. என்னன்னு பாருங்க.

0
514
jaibhim
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-80-1024x526.jpg

1995 ஆம் ஆண்டு இருளர் இனத்தை சேர்ந்த ராஜா கண்ணு – பார்வதி தம்பதியருக்கு நடந்த அநீதியை இந்த படம் வெளியில் கொண்டு வந்தது. இந்த படம் வெளியான பின்னர் உண்மையான ராசாக்கண்ணுவின் குடும்பத்தினரை தேடி பலரும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பார்வதியின் தற்போதைய ஏழ்மை நிலையை பிரபல செய்தி சேனல் செய்தியாக வெளியிட்டது.

இதையும் பாருங்க : மழையை ரசித்தப்படி சமந்தா போட்ட ஆட்டம் – வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ (முன்னாள் கணவர வெறுப்பேத்த இப்படிலாம் பன்றாரோ ?)

- Advertisement -

பார்வதியின் ஏழ்மையை நிலையை அறிந்த நடிகர் லாரன்ஸ், அவருக்கு தன் சொந்த செலவில் வீடு கட்டித்தரப்படும் என்று உறுதியளித்தார். இப்படி ஒரு நிலையில் போலீஸ் சித்ரவதையால் உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் கே.பாலகிருஷ்ணன் அறிக்கைக்குக்கும் கோரிக்கைக்கும் பதில் அளித்துள்ள சூர்யா ‘மறைந்த ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் அவர்களுக்கு ஏதேனும் தொலைநோக்கோடு கூடிய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவருடைய முதுமை காலத்தில் இனிவரும் வாழ்நாள் முழுவதும் பயனளிக்கும் வகையில் திரு. பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் ‘பத்து இலட்சம்’ ரூபாய் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதம்தோறும் அவர் பெற்றுக் கொள்ள வழி செய்ய முடிவு செய்திருக்கிறோம். அவர் காலத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அத்தொகை போய் சேரும்படி செய்யலாம். என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement