இது சமந்தானு சொன்னா அவர் புருஷன் கூட நம்ப மாட்டாரே – ரசிகர்கள் வைத்த சமந்தாவின் சிலையை பாருங்க.

0
3247

என்னதான் நவீன உலகம் பல முன்னேற்றத்தை நோக்கி பயணித்து கொண்டு இருந்தாலும், அன்றும் இன்றும் என்றும் மக்களிடத்தே குறையாதது சினிமா மோகம் தான். பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் படம் வந்தா கட் அவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என்று தான் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய் அலகு குத்திக்கொள்வது, மண் சோறு சாப்பிடுவது, கையில் கற்பூரம் ஏற்றுவது என்று கடவுளுக்கு செய்வதை நடிகர் நடிகைகளுக்கும் செய்யும் வேடிக்கையும் அவ்வப்போது நடந்து தான் வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருராக திகழ்ந்து வரும் சமந்தாவிற்கு ரசிகர்கள் சிலர் கோவில் கட்டி சிலை வைத்துள்ள சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதையும் பாருங்க : நடிகைங்களாவது படத்துக்காக தான் கிளாமர் காட்றாங்க, ஆன நீ ? இதுல புரட்சி மண்ணாங்கட்டி வேற – கேலி செய்த நபருக்கு பொறுமையாக ஜூலி அளித்த பதில்.

- Advertisement -

திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள்.

இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தாவின் ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோவில் கட்டி சிலை ஒன்றை வடிவமைத்து உள்ளனர். தமிழ் நடிகைகளில் குஷ்பூவிற்கு தான் கோவில் கட்டினார்கள், அதன் பின்னர் நயன்தாராவிற்கு கூட கோவில் கட்ட பார்த்தார்கள். இப்போது சமந்தாவும் அந்த இடத்தை பிடித்துள்ளார். ஆனால், இந்த சிலையை பார்த்தால் இது சமந்தா என்று அவரது கணவரான நாக சைதன்யா கூட நம்ப மாட்டார் என்று தான் பலரும் கேலி செய்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன பாஸ்.

-விளம்பரம்-
Advertisement