கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டேனா, கருக்கலைப்பு செய்தேனா ? – முதன் முறையாக மன குமுறலை கொட்டிய சமந்தா.

0
6051
samantha
- Advertisement -

நீண்ட நாட்களாக நீடித்து இருந்த சமந்தா, நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்து இருந்தது. இவர்களின் முடிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஇருந்தது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

-விளம்பரம்-

நடிகை சமந்தா அவர்கள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கிறிஸ்துவ, இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீப காலமாகவே சமந்தாவுக்கும், நாகா சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது.

- Advertisement -

இந்த சர்ச்சை முதன் முதலாக எழுந்த காரணம் நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்த ‘அக்கினேனி ‘ என்ற நாகர்ஜுனாவின் குடும்ப பெயரை நீக்கிவிட்டு தன் பெயரின் முதல் எழுத்தான வெறும் ‘S’ என்று மட்டும் வைத்து இருந்தார். அப்போதில் இருந்தே சமந்தா விவகாரத்து சர்ச்சை வைரலானது. இப்படி ஒரு நிலையில் கடந்த 2 ஆம் தேதி இவர்கள் இருவருமே தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பின்னர் சமந்தா தொடர்ந்து நடித்து வந்ததாலும் பெமலி மேன் தொடரில் கவர்ச்சியாக நடித்ததாலும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரியில், பெண்களால் செய்யப்படும் விஷயங்கள் தொடர்ந்து தார்மீக ரீதியாக கேள்விக்குறியாக இருக்கிறது, ஆனால் ஆண்களை யாரும் கேட்பது இல்லை என்றால் நமக்கும் இந்த சமூகத்திற்குமே எந்த ஒரு தார்மிகமும் கிடையாது என்று ஒரு தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

மற்றொரு பதிவில் தனிப்பட்ட பிரச்சனைக்காக உங்கள் உணர்ச்சிபூர்வமான முதலீடு என்னைமூழ்கடித்துவிட்டது, ஆழ்ந்த அனுதாபம் காட்டியதற்கும், பொய்யான வதந்திகள் மற்றும் கதைகளுக்கு எதிராக என்னை பாதுகாத்ததற்கும் நன்றி, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்று நான் குழந்தை பெற சம்மதிக்கவில்லை என்றும், இப்போது நான் கருக்கலைப்பு செய்தேன் என்றெல்லாம் சொன்னார்கள்.

விவாகரத்து என்பது மிகவும் வலிமிகுந்த செயல்முறையாகும், எனக்கு இதில் இருந்து மீள நேரத்தை எடுத்துக்கொண்டேன். தனிப்பட்ட முறையில் என் மீதான இந்த தாக்குதல் இடைவிடாமல் இருந்தது. ஆனால் இதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் . இதை நான் அனுமதிக்க மாட்டேன், அவர்கள் எதை செய்தும் என்னை உடைக்கமுடியாது என்று பதிவிட்டு அணைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement