அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள்’ – சமந்தாவின் நண்பர் போட்ட பதிவால் எழுந்த சர்ச்சை.

0
197
samantha
- Advertisement -

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலித்த விவகாரம் வெளியே வர துவங்கியது. இதனை அடுத்து இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள்.மேலும், இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது.ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. விவாகரத்து பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமந்தாவின் நண்பர் ப்ரீத்தம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘தங்கள் குடும்ப ஆண்களின் உண்மையான குணத்தை மறைக்க கூடியவர்கள் அவர்கள். அவர்கள் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணமானவர்கள் வன்முறை என்பது மனதளவில் சித்ரவதை செய்வது மற்றும் விமர்சனம் செய்வது’ என்று குறிப்பிட்டு இருந்தார். ப்ரீத்தமின் இந்த பதிவை கண்ட பலரும் சமந்தாவை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை போட்டு இருக்குறார் என்று கூறி வருகின்றனர்.

சமந்தா விவகாரத்து செய்த போதே சமந்தா – நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர் தான் என்று சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அப்போது இதுகுறித்து பேசிய ப்ரீத்தம் ‘, இவ்வளவு நடந்தும் நாக சைதன்யாவின் அமைதி எனக்கு கவலையளிக்கிறது. சமந்தா எனக்கு சகோதரி போன்றவர். நான் அவரை எப்போதுமே ஜிஜி என்று தான் அழைப்பேன். இது அனைவருக்குமே தெரியும். எங்களை எப்படி ஒருவர் தொடர்புபடுத்திப் பேச முடியும்?

-விளம்பரம்-

மேலும், எனக்கு நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக தெரியும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையே உள்ள உறவு முறை என்னவென்று அவருக்கும் தெரியும்.என்னையும், சாமையும் பற்றி யாரும் அப்படி பேச வேண்டாம் என்று நாக சைதன்யா வாய் திறந்து பேசி இருக்கலாம். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியீட்டு இருந்தால் கூட அது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். சிலர் ரசிகர் என்ற பெயரில் தவறான தகவல்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தயவு செய்து இனிமேல் இந்தமாதிரி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement