விவகாரத்து சர்ச்சை வரை சென்ற அதே இயக்குனருடன் மீண்டும் கை கோர்த்த சமந்தா. ஹீரோ யார் பாருங்க ?

0
244
samantha
- Advertisement -

பிரபல நடிகருடன் சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

-விளம்பரம்-

‘தி ஃபேமிலிமேன் 2’

பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து இருந்தது. பிரிவிற்கு பின் சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் விவகாரத்துக்கு முன்னர் சமந்தா நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப்தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

- Advertisement -

சமந்தாவின் அடுத்த வெப் சீரிஸ் :

இதனை தொடர்ந்து மீண்டும் அந்த தொடரின் இயக்குனருடன் சமந்தா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தார்கள். இந்த வெப் தொடரில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்றவர்கள் நடித்து இருந்தார்கள். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது.

The Family Man 2: What Samantha Ruth Prabhu Wrote About Her Character Raji

மீண்டும் சர்ச்சை இயக்குனருடன் சமந்தா :

ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் வெற்றியை தொடர்ந்து ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதில் சமந்தா, மனோஜ் பாஜ்பாய் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் அமேசான் ஓடிடியில் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதோடு இந்த வெப் சீரிஸ் ஈழ தமிழர்களுக்கு எதிராக இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தது.

-விளம்பரம்-

விவகாரத்து சர்ச்சை வரை பேசப்பட்ட வெப் சீரீஸ் :

அதே போல இந்த வெப் தொடரில் சமந்தா படு கவர்ச்சியாக நடித்து இருந்தார். இதனால் தான் சமந்தாவிற்கும் நாக சைதன்யா குடும்பத்திற்கு மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் தான் நாக சைதன்யா, சமந்தாவை விவகாரத்து செய்தார் என்றும் சர்ச்சைகள் கூட கிளம்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராஜ் மற்றும் டீகே இயக்கும் தொடரில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

திரில் மட்டும் ஆக்ஷன் :

அமேசான் ஓடிடிக்காக உருவாக்கப்படும் இந்த தொடர் திரில் மட்டும் ஆக்ஷன் பாணியில் உருவாக இருக்கிறது. இந்த தொடரில் கதாநாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெற இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த தொடர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த தகவலை ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement