கல்லீரலுக்கு டாக்டரை போல சமந்தா பரிந்துரைத்த மருந்து – பொய்யான கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்.

0
145
- Advertisement -

உடல் ஆரோக்கியம் குறித்து சமந்தா பேசிய கருத்துக்கு எதிராக மருத்துவர் ஒருவர் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீப காலமாக இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இறுதியாக இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா அதிக வேதனையில் இருந்தார். கடைசியாக விஜய் தேவர்கொண்டாவுடன் இவர் நடித்த குஷி படம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது. சமந்தாவிற்கு இது ஒரு கம்பேக் படமாக அமைந்து இருந்தது. இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இது ஒரு வகையான தசைய அலர்ஜி நோய் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சமந்தா குறித்த தகவல்:

இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரண குணமடையவில்லை. இதனால் இவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக இருப்பதாக கடந்த ஆண்டு சமந்தா முடிவு எடுத்து இருந்தார். நீண்ட ஓய்வுக்கு பிறகு சமந்தா மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

சமந்தா பேசிய கருத்து:

மேலும், நடிகை சமந்தா அவர்கள் பாட்காஸ்ட் என்பதன் மூலம் உடல் நலம் குறித்து மயோசிட்டிஸ் நோய் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதை அவர் ஊட்டச்சத்து நிபுணர் அல்கேஷ் ஷரோத்ரியுடன் இணைந்து செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் கல்லீரல் நச்சுக்களை சுத்தப்படுத்துவது குறித்து பேசி இருக்கிறார். அதில், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த டேன்டேலியன் என்ற மூலிகை சிறந்தது என்று இருவரும் கூறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் பதிவு:

இந்த நிலையில் இப்படி இவர்கள் பேசியிருந்ததற்கு மருத்துவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், கல்லீரல் நச்சுக்களை சுத்தப்படுத்துவது தொடர்பாக தங்களுடைய ரசிகர்களுக்கு சமந்தா தவறான வழிகாட்டுதலை செய்கிறார். அறிவியல் பற்றி தெரியாத இருவர் தங்கள் அறியாமையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த மூலிகையாக டேன்டேலியன் என்ற மலர் இருப்பதாக சமந்தாவுடன் மருத்துவர் என்று ஒரு நபர் உரையாடிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவர் கொடுத்த பதிலடி:

நான் ஒரு கல்லீரல் மருத்துவர் தான். டேன்டேலியனை சாலட்டில் பயன்படுத்தலாம். சிறுநீர் வெளியீட்டை அதிகரிக்கலாம், பாரம்பரிய மருத்துவத்தின் படி டையூரிடிக் அல்லது தண்ணீர் மாத்திரை போல வேலை செய்யலாம். ஆனால், இதற்கெல்லாம் சான்றும் இல்லை. சான்றுகள் அடிப்படையில் டேன்டேலியன், உணவு வயிற்றிலிருந்து வெளியேறி சிறுகுடலுக்குள் நுழையும் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை எளிதாக்க முடியும். குறிப்பாக, நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் வளர்க்கப்படும் டேன்டேலியன்களில் பூச்சிக்கொல்லிகள் ஆபத்து. காட்டு டேன்டேலியன்களை சாப்பிடுவது குறித்து பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement