-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நான் என் திருமண பந்தத்தில் நூறு சதவிகிதம் உண்மையாக இருந்தேன்,ஆனால் – விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா.

0
891
samantha

விவாகரத்து சர்ச்சை குறித்து முதன் முறையாக மனம் திறந்து நடிகை சமந்தா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சமந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

சமந்தா-நாக சைதன்யா பிரிவு:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், கருத்துக்களும் எழுந்த வண்ணம் இருந்தது. மேலும், பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார்கள். அந்த வகையில் புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார் சமந்தா. அதை தொடர்ந்து சமந்தா பல படங்களில் நடித்து இருந்தார்.

samantha

சமந்தாவை பாதித்த நோய்:

-விளம்பரம்-

பின் சமந்தா தனக்கு Myositis என்னும் Autoimmune நோய் தன்னை தாக்கி இருந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்தார். அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த பிரச்சனை காரணமாக சில படங்களில் இருந்து சமந்தா விலகியதாகவும் கூறி இருந்தார். சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்தின் போது தான் இவருக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால், அந்த வலியுடன் இந்த படத்திற்கான டப்பிங் பேசி முடித்தார். இந்த யசோதா திரைப்படத்திற்கு பின்னர் நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சாகுந்தலம் படம்:

இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ்ராஜ், மதுபாலா நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இது தொடர்பான பேட்டி ஒன்று சமந்தா அளித்திருந்தார்.

samantha

விவாகரத்து குறித்து சொன்னது:

அதில் அவரிடம் விவாகரத்து குறித்து கேட்டதற்கு, நான் விவாகரத்து செய்த சில நாட்களிலேயே எனக்கு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலில் நடனமாட வாய்ப்பு வந்தது. நான் உடனடியாக சரி என்று சொன்னேன். ஆனால், நண்பர்கள், குடும்பத்தினர் என்னிடம் இந்த நேரத்தில் இருந்து குத்து பாடலுக்கு ஆடுவது நன்றாக இருக்காது என்றார்கள். நான் என் திருமண பந்தத்தில் 100% உண்மையாக இருந்தேன். ஆனால், எனக்கு சரியாக அமையவில்லை. நான் செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் வருத்தப்பட வேண்டும். ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news