இது தான் சிம்புவின் ஆல் டைம் ரெக்கார்டா ? – பத்து தல படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?

0
346
Pathuthala
- Advertisement -

சிம்பு நடித்துள்ள “பத்து தல” படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் சிம்பு. சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. அந்த வகையில் பல எதிர்பார்ப்புகளுடன் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல.

-விளம்பரம்-

இந்த படத்தை ஒபிலி என் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கவுதம் மேனன், ப்ரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். கன்னடத்தில் வெளிவந்த மஃப்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல.இருந்தாலும் படத்தில் பல மாறுதல்கள் செய்திருப்பதாக இயக்குனர் கிருஷ்ணா கூறியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் பத்து தல படம் கடந்த 30 ஆம் தேதி வெளியாகியது.

- Advertisement -

பத்து தல :

பத்து தல படத்தில் முதல் இடைவேளைக்கு பிறகே சிம்பு ஏஜிஆர் கதாபாத்திரமாக வருகிறார். ஆனால் அதற்கு பிறகு படத்தின் இரண்டம் பாதி முழுவதும் சிம்புவின் ஆதிக்கம் இருக்கிறது. அதோடு படத்தின் கிளைமாக்ஸில் வரும் காட்சிகளில் சிம்புவின் ரசிகர்களின் மகழ்ச்சி அளவு கடந்தது. அந்த அளவிற்கு படத்தை தன்னுடைய தோள்களின் மீதி ஏற்றி எடுத்து சென்றிருக்கிறார். இதனால் சிம்புவின் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வெற்றிப்படமாகவே பார்க்கப்படுகிறது.

பிளாக் பஸ்டர் ஹிட் :

அதோ போல பத்து தல படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீர்ன்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரிய வெற்றி முதல் நாளிலேயே என்று ஒரு பதிவை இட்டிருந்தது. ஆனால் என்னதான் ரசிகர்கள் அவர்களது நடிகர்களின் படங்களை கொண்டாடினாலும் இறுதியில் படத்தின் வசூல் மட்டுமே படத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். அந்த வகையில் தற்போது “பத்து தல” படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

-விளம்பரம்-

வசூல் :

தகவலின் படி பத்து தல படம் 450 திரையரங்குகளில் 650 ஸ்கீரீன்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாள் முடிவில் பத்து தல படம் தமிழ் நாட்டில் மட்டுமே 7 கோடி ரூபாயை வசூலித்தாக தகவல் கிடைத்துள்ளது. பத்து தல படம் தமிழ் நாட்டை தவிர்த்து மற்ற இடங்களிலும் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு வெளியில் 4 கோடி ரூபாய் வசூலித்து மொத்தமாக முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமே சிம்புவின் திரைவாழ்க்கையில் அதிகம் முதல் நாள் வசூல் செய்த திரைப்படமாகும்.

இந்நிலையில் நேற்று பத்து தல படத்திற்கு போட்டியாக தெலுங்கு நடிகர் நானி நடித்த “தசரா” படம் வெளியானது. அந்த படம் முதல் நாளிலேயே 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இன்று இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 1 படமும் வெளியாகி இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் வாரத்தின் இறுதியில் எந்த படம் அதிக வசூல் செய்யும் என்று.

Advertisement