சாய் பல்லவியின் நடனத்தை பார்த்து மிரண்டு போன சமந்தா- என்ன சொல்லி இருக்காரு பாருங்க, வைரலாகும் வீடியோ

0
4888
Samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் கோயம்பத்தூரை பூர்விகமாக கொண்டவர். இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘உங்களில் யார் அடுத்த பிரபு தேவா’ என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பின் 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் சாய் பல்லவி ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்போது கூட இவரை அதிகம் மலர் டீச்சர் என்று தான் ரசிகர்கள் கூப்பிடுகிறார்கள். பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சாய்பல்லவி திரைப்பயணம்:

கடந்த ஆண்டு சாய்பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து ‘விரத பர்வம்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக சாய்பல்லவி திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சாய்பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். இதனை அடுத்து சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கார்கி.

கார்கி படம்:

இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சாய் பல்லவி உடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தை ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஐஸ்வர்யா, லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

சாய்பல்லவியின் நடன வீடியோ:

பிரபலங்கள் பலரும் சாய்பல்லவி நடிப்பை பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் சாய்பல்லவியின் நடன வீடியோவை பார்த்து சமந்தா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சாய் பல்லவி சிறந்த டான்ஸர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சமந்தா கூறிய பதில்:

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் சாய்பல்லவி நடனத்தை பார்த்து சமந்தா அவரை பாராட்டியிருந்தார். அது மட்டும் இல்லாமல், நீங்கள் டான்ஸ் ஆடும் போது உங்கள் மீது இருந்து என் கண்களை அகற்றவே முடியவில்லை என்றெல்லாம் கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அப்போது சாய் பல்லவி மிகவும் குட்டி பெண்ணாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement