பாலிவுட் படத்தில் இருந்து விலகிய சமந்தா – தன் சினிமா கேரியரில் அவர் எடுத்துள்ள முக்கிய முடிவு.

0
309
- Advertisement -

இந்திய முன்னணி நடிகையான சமந்தா Myositis என்னும் Autoimmune நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எடுத்துள்ள முடிவு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா இயக்குனர் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “விண்ணைத்தேடி வருவாயா” என்ற திரைப்படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் அவர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து பானா, நான் ஈ, அஞ்சான், கத்தி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
samantha

இந்தியாவின் பல மொழி படங்களில் நடிகை சம்ந்தா நடித்திருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா அந்த “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த “காத்துவாக்குல ரெண்டு” காதல் என்ற படத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து சமந்தா நடித்திருந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் இந்தியிலும் இவருக்கு அதிக ரசிகரக்ள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமந்தா திடீரென சோசியல் மீடியாக்களில் பதிவுடுவதை தரவிர்த்து வந்தார். இதனால் ரசிகர்கள் எந்த காரணத்திற்காக சமந்தா இப்படி நடந்து கொள்கிறார் என்றிருந்த நிலையில் தனக்கு Myositis என்னும் Autoimmune தன்னை தாக்கியுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை தற்போது எடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். அதே போல “யாசோதா” படத்தின் டப்பிங்கிலன் போது கூட மருத்துவமனையில் இருந்துதான் டப்பிங் செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

samantha

தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ள சமந்தா அவரது சொந்த ஊரில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது. மேலும் தென் கொரியாவுக்கு சென்று சிகிச்சை எடுக்க உள்ளதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகிக்கொண்டே செல்வதினால் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார். அது தன்னுடைய உடல் முழுவதுமாக குணமாகும் வரை தான் எந்த படத்திலும் நடிக்க போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் நடித்திருந்த “தி பேமிலி மேன் சீசன் 2டிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து மேலும் படங்களில் நடிப்பதற்கு சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால் சமந்தா தற்போது எடுத்துள்ள முடிவினால் தான் நடிக்கப்போவதில்லை என்று அடுத்து நடிக்கவிருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு தொலைபேசியின் மூலம் நேரடியாக கூறியுள்ளார். இதனால் அந்த பட தயாரிப்பாளர்கள் வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.

நடிகை சமந்தா தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் இவரும் நடிகர் விஜய் தேவர்க்கொண்டவும் சேர்ந்து நடித்திருந்த குஷி படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய 60 சதவிகிதம் முடிந்துள்ள நிலையில் இப்படத்தை எப்படியாவது முடித்து கொடுக்க வேண்டும் என்று குறியாக உள்ளார். இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா பூரண குணமாகி மீன்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement