முன்னாள் கணவரின் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய சமந்தா – நாக சைதன்யா பற்றிய இந்த வதந்தி தான் காரணமா ?

0
425
nagachaitanya
- Advertisement -

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் தெலுங்கு நடிகை மற்றும் மாடலான சோபித துலிபாலாவை நெருங்கி பழகி வருவதாக வதந்தி சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபித இணைந்து இருக்கும் புகைப்படமானது வெளியாகி வைரலாகி வருகிறது. 2016ஆம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் 2.0 என்ற ஹிந்தி சினிமாவின் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சோபித துலிபாலா. இப்படத்திற்கு பின்னர் பல திரைப்படங்களில் நடித்த இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் பகுதி 1 திரைப்படத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவரும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனனே நடிகர் நாக சைதன்யா கடந்த ஆண்டுகளில் சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கடந்த ஆண்டு 2021ல் திடீரென இருவரும் பிரிவதாக தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தனர். அப்போது நடிகை சமந்தா மீது பல விமர்சனங்கள் எழுப்பட்டது. இந்நிலையில் யசோதா திரைப்படத்தில் நடித்து சமந்தாவிற்கு மயோசிடிஸ் என்ற குணப்படுத்த முடியாதா நோய் தாக்கியுள்ளது என அப்படத்தின் பிரமோஷனின் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். அந்த செய்தி சமர்ந்தாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

- Advertisement -

சமந்தாவின் நிலைமை :

இந்நிலையில் தற்போது சமந்தா உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில். இப்படியிருக்கும் போது சமந்தாவின் முன்னால் கணவரான நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபித துலிபாலாவை காதலிப்பதாக வந்த தகவலினால் சமந்தா தான் அவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதா கூறப்படுகிறது. சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்த பிறகும் கூட அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமந்தா நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியுடன் ஊர்சுத்தும் நாக சைதன்யா :

இந்நிலையில் ஷோசியல் மீடியாவில் நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபித கருப்பு நிறத்தில் ஜோடியாக ஆடை அணிந்து புகைப்படம் ஓன்று இணையத்தில் உலா வருகிறது. இதனை டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பல முன்னணி செய்தி ஊடகங்கள் “மேட் இன் ஹெவன்” என்ற தலைப்போடு செய்தியினை வெளியுட்டிருந்தனர். அதே சமயத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸில் அமைந்துள்ள நாக சைதன்யாவின் வீட்டில் இவர்கள் ஜோடி ஒன்றாக காணப்பட்டதாகவும். நடிகை சோபிதாவும் புதிய வீட்டில் ஒன்றா நேரத்தை கலித்தாகவும் பின்னர் ஒரே காரில் இருவரும் ஒன்றாக சென்றதாகவும் தகவல்கள் சுற்றுவட்டாரத்தில் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ஆதங்கத்தை வெளிப்படுத்திய நெட்டிசங்கள் :

மேலும் பல பேர் இவர்கள் இருவரும் ஒன்ற இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பலர் இவரின் செயலுக்கு அதிர்ப்தி தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் அன்று சமந்தாவை தூண்டியவர்கள் இப்போது எங்கே இருந்தார்கள் ?? சமந்தாவை மட்டும் குறை சொல்லி வந்தவர்களே உங்களுக்கு தைரியம் இல்லை. தவறு செய்தவர் ட்ரோல் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார் தவறு செய்யாத சமந்தா ட்ரோல்களால் அவதிப்படுகிறார் ” என்று ஒரு ரசிகர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா முன்னாள் கணவரான நடிகர் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியதாக கூறப்படுகிறது.

Advertisement