‘உங்களுக்கு அறிவில்ல’ – நாக சைதன்யாவின் லேட்டஸ்ட் வீடியோவுடன் ஒப்பிட்டு ரசிகர் கேட்ட கேள்வியால் கடுப்பான சமந்தா.

0
1035
- Advertisement -

ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு கடுப்பாக்கி சமந்தா அளித்திருக்கும் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி தெலுங்கில் வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

பின் சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா மனம் உடைந்து போய் விட்டார். இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த குஷி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

குஷி படம்:

இந்த படத்தை சிவா நிர்வாணா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டா, சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த சமந்தாவின் குஷி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது.

மயோசிடிஸ் நோய்:

ஆனால், கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருப்பதால் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சமந்தா விவாகரத்து:

இதனிடையே சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்குமே அதிர்ச்சியாக இருந்தது. பிரிவிற்கு பிறகு இருவருமே தங்களுடைய கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இருந்தாலும், சமந்தா நாகசைதன்யா குறித்த சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் தான் இருக்கிறது.

சமந்தா கொடுத்த பதிலடி:

இந்த நிலையில் நாக சைதன்யா தன்னுடைய ஊழியர் வாங்கிய பைக்கை ஒட்டி பார்க்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் சமந்தா வளர்த்த நாய்க்குட்டி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் நாய்க்குட்டி நாக சைதன்யா இருக்கிறது. ஒருவேளை நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று கேட்டிருக்கிறார். சிலர் இதைக் கேலியும் செய்திருந்தார்கள். இதை பார்த்த சமந்தா, உங்களுக்கு அறிவில்லையா? வேலை இல்லாமல் இருக்கிறீர்களா? சும்மா இருந்தால் தயவு செய்து ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள். அறிவாவது வளரும் என்று கடுமையாக விளாசி பதில் கொடுத்து இருக்கிறார்.

Advertisement