மீடியா நபர்களிடம் சமந்தா கோபப்பட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் மீண்டும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் பேமிலி எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் பிரவீன் படம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தா விவாகரத்து:
இதற்கிடையில் சமந்தா அவர்கள் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சில மாதங்களாக சமந்தாவின் காதல் கிசுகிசு குறித்த செய்திதான் இணையத்தில் காதல் வருகிறது.

சமந்தா சர்ச்சை:
இவர் இயக்குனர் ராஜ் நிடிமோருடன் கை கோர்த்தபடி செல்வது, பேசுவது, ஒன்றாக அமர்ந்து இருப்பது என்று இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலருமே இருவரும் காதலிப்பதாக சொல்லி வந்தார்கள். ஆனால், இதற்கு சமந்தா தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் கூட சமந்தா துபாய் சென்று இருந்தார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்திருந்தார். அதை பார்த்து பலரும் இவர் தன்னுடைய அதை உடன் தான் சென்றிருக்கிறார் என்றெல்லாம் கிசு கிசுக்கப்பட்டது.
View this post on Instagram
சமந்தா வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தா ஜிம்மில் உடற்பயிற்சி செய்து விட்டு வெளியே வரும்போது போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஜிம்முக்கு வெளியே இருந்த புகைப்பட கலைஞர்கள், அவரிடம் புகைப்படம் எடுக்க காத்துக்கொண்டிருந்தார்கள். பின் வெளியே வந்த சமந்தாவிடம், காலை வணக்கம் சமந்தா மேடம் என்று சொன்னார்கள். உடனே சமந்தா கோபப்பட்டு, புகைப்பட கலைஞர்களை விரட்டி விட்டு தன்னுடைய காரில் சென்றிருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சிலர் சமந்தாவின் செயலை விமர்சித்தும், ஆதரவும் தெரிவித்தும் வருகிறார்கள்.






