தமிழ் சினிமாவில் நடிக்காத காரணம் குறித்து சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
சமந்தா பேட்டி:
அதோடு சமீப காலமாகவே இவர் தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை. இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் சமந்தா, பல படங்களில் நடிப்பது ரொம்ப எளிமையான விஷயம்தான். இது தான் என்னுடைய கடைசி படம் என்ற எண்ணத்தில் யோசிக்க கூடிய அளவுக்கான படங்களில் நடிக்கும் கட்டத்தில் தான் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். அப்படியான ஒரு தாக்கத்தை அந்த படங்கள் கொடுக்க வேண்டும்.
தமிழில் நடிக்காத காரணம்:
இதை நான் 100 சதவீதம் நம்பிக்கை இல்லை என்றால் அந்த படங்களில் நான் நடிக்க மாட்டேன். நடிகராக எனக்கு சவால் நிறைந்த கதாபாத்திரங்களை தான் நான் நடிக்க விரும்புகிறேன். எனக்கு மன நிறைவு தராத படங்களை நான் ஒருபோதும் தேர்வு செய்வது கிடையாது. மற்றபடி வேறு எந்த காரணமும் கிடையாது என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார்.
சமந்தா திருமணம்:
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தான் நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடந்தது. இவர் நடிகை சோபிதாவை தான் திருமணம் செய்து இருக்கிறார்.