பெண் விவாகரத்து குறித்து சமந்தா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார்.

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் இவர் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரியஸ் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது.
சமந்தா திரைப்பயணம்:
இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விவாகரத்து தொடர்பாக சமந்தா கூறி இருப்பது, ஆண்கள் விவாகரத்து வாங்கினால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. காரணம், நான் ஆண் இல்லை பெண். நான் பெண்களைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன்.

சமந்தா பேட்டி:
ஒரு பெண் விவாகரத்து வாங்கி விட்டால் அவள் நிறைய அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.
அது எந்த அளவுக்கு போகும் என்றால் செகண்ட் ஹேண்ட், பயன்படுத்தப்பட்டது, வீணான வாழ்க்கை என்றெல்லாம் சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல் உங்களை ஒரு மூலைக்கு தள்ளுவார்கள். ஒரு பெண் விவாகரத்து வாங்கினால் பெண்கள் வட்டத்தில் அவர்களை குற்றவாளி போல் பார்ப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அவர்களை விதவிதமாக அவமானப்படுத்துவார்கள்.

பெண்கள் விவாகரத்து:
நீங்கள் ஒரு முறை விவாகரத்து பெற்றவர் என்று தெரிந்தால் உங்களை பெண்கள் கூட்டம் பார்க்கும் முறை மாறிவிடும். கேலி செய்வார்கள். நம்முடைய சமூகத்தில் அப்படி விவாகரத்து ஆன பின் அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருமே நிறைய வேதனையை அனுபவிக்க வேண்டி இருக்கிறது. காரணம், விவாகரத்து ஆனவர்களை இந்த சமூகம் விசித்திரமான மனிதர்களை போல தான் பார்க்கிறது. நான் சமூகம் என்று சொல்வது பெண் சமூகம். காரணம், நான் பெண், ஆண் கிடையாது. அதனால்தான் நான் எதைப்பற்றி பேசினாலும் பெண்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். காரணம், ஆண்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருக்கிறார்.
சமந்தா திருமணம்:
இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். விவாகரத்திற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தான் நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடந்தது. இவர் நடிகை சோபிதாவை தான் திருமணம் செய்து இருக்கிறார்.






