நான் பரவாயில்ல மறுபடியும் போய் டீ கட திறந்துப்பேன், ஆனா இந்த நாடு – மோடியின் பழைய பதிவிற்கு சித்தார்த் கொடுத்த கேலியான பதில்.

0
1761
sid
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவை போல பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பல்வேறு பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்கவும், அது குறித்து விழிப்புணர்வூ ஏற்படுத்தவும் நாட்டின் பிரதமர் மோடி அடிக்கடி காணொளி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவது 76-வது முறையாகும். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசிகள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க : குஷி பட ஜோதிகா போல ட்ரான்ஸ்பிரென்ட் உடையில் புதிய முல்லை நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சித்தார்த்த, மோடியின் பழைய ட்வீட் ஒன்றிற்கு தற்போது பதில் அளித்து நக்கல் செய்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

சமுதாயத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விஷயங்கள் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அதிலும் மோடி அரசுக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டில் மோடி செய்த டீவீட்டுக்கு தற்போது அளித்துள்ளார் சித்தார்த்.

-விளம்பரம்-

மோடியின் அந்த டீவீட்டில், இந்தியாவிற்கு ஒரு வலுவான அரசு தேவை. மோடி ஒன்றும் கிடையாது. நான் மறுபடியும் சென்று டீ கடையை கூட போட்டுக்கொள்வேன். ஆனால், இதற்கு மேலும் நாடு கஷ்டப்படக் கூடாது. மோடியின் இந்த பதிவிற்கு நேற்று பதில் அளித்துள்ள சித்தார்த், இந்த மனிதர் சொல்லும் அணைத்து பாயிண்ட்ஸ்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களால் நம்ப முடியுதா ? என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement