தோழியின் அண்ணன் என்பதால் வேட்பாளருக்கு வாக்களிப்பதா.! சமந்தாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

0
558
Samatha
- Advertisement -

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது அதற்கு முன்பாக இந்தியாவில் உள்ள ஆந்திரா ஒரிசா மகாராஷ்டிரா போன்ற 91 தொகுதிகளில் இன்று லோக்சபா எலக்சன் நடைபெற்றது அதேபோல ஆந்திரா சிக்கிம் போன்ற பகுதிகளில் தேர்தல் இன்று மும்முரமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்தநிலையில் குண்டூரில் தெலுங்கு தேச கட்சியின் பிரதிநிதியாக அனகன்னி சத்யா பிரசாத் என்பவர் போட்டியாளராக போட்டியிட்டுள்ளார். இவர், அதே தொகுதியில் தற்போது எம் எல் ஏவாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரை ஆதரித்து நடிகை சமந்தா சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதையும் படியுங்க : வெளியானது இரும்பு திரை 2 பற்றிய அறிவிப்பு.! ஆனால், இயக்குனர் மித்ரன் இல்லை.! 

- Advertisement -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமந்தா,
அனகன்னி சத்யா பிரசாத் தன்னுடைய குடும்ப நண்பர் எனவும் நாங்கள் ஹைதராபாத்திற்கு வந்ததில் இருந்தே அவரை தெரியும் என்றும் அவர் சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அவரது தங்கை மஞ்சுளாவையும் தனக்கு மிகவும் நன்றாக தெரியும் என்பதால் அவருக்கு எனது ஆதரவை தெரிவித்தேன் என்று கூறியிருந்தால் சமந்தா. சமந்தாவின் இந்த பதிவிற்கு பின்னர் வலைதள வாசிகள் பலரும் தோழியின் நண்பர் என்பதால் நாட்டை ஆள ஆதரிப்பதா என்று சமந்தாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement