எப்படி இருக்கிறது சமந்தாவின் ‘யசோதா’ – கூடவே FDFS ரசிகர்களின் Review.

0
605
yas
- Advertisement -

இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யசோதா. இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தாவுடன் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், முகுந்தன், சம்பத்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகி இருக்கும் யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சமந்தா அவர்கள் பண தேவைக்காக வாடகை தாயாக மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு சமந்தாவைப் போல பல பெண்கள் இருக்கின்றனர். மருத்துவமனையில் வாடகை தாயாக வரும் பெண்களை அவர்கள் வேறு ஏதோ தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உண்மை சமந்தாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் சதி திட்டங்களை கண்டுபிடிக்க சமந்தா முயற்சிக்கிறார். இறுதியில் சதித்திட்டங்களை சமந்தா முறியடித்தாரா? சமந்தாவிற்கு என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை.

- Advertisement -

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தை சமந்தா தான் தாங்கி சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த படத்தில் சமந்தா உடைய நடிப்பும், உழைப்பும் அதிகமாக இருக்கிறது. சண்டை காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளிலும் சமந்தா நேர்த்தியாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் சமந்தா உடைய காட்சிகள் எல்லாம் திரையரங்கில் விசில் பறக்க வைத்திருக்கிறது. இவரை அடுத்து படத்தில் வரலட்சுமி சரத்குமார் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவருடைய காட்சிகளும் நன்றாக இருக்கிறது. இவர்களை தொடர்ந்து படத்தில் உள்ள பிற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இயக்குனர்கள் இந்த படத்திற்காக பல மெனக்கட்டு இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

-விளம்பரம்-

இயக்குனர் கதையை கையாண்ட விதம் சிறப்பு. படம் முழுக்க முழுக்க எமோஷனல், திரில்லர் பாணியில் சென்று கொண்டிருக்கின்றது. அதிலும் இரண்டாம் பாதியில் வரும் டீவ்ஸ்ட் எல்லாம் சூப்பர். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை படம் குறித்து பலருமே பாராட்டி வருகின்றனர். மொத்தத்தில் யசோதா படம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

நிறைவு:

சமந்தா, வரலக்ஷ்மி நடிப்பு சூப்பர்.

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

இயக்கம் திரைக்கதை அருமை.

எமோஷனல் திரில்லர் பாணியில் படம் இருக்கிறது,

கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்.

குறைவு:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்.

கிராபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மற்றபடி பெரிதாக குறைபாடுகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் சமந்தாவின் யசோதா படம் – ஜொலிக்கிறது

Advertisement