‘உங்கள் மகள் திருமணத்திற்கு செலவு செய்வதற்கு பதில்’ – மகள்களின் வளர்ப்பு குறித்து சமந்தா பகிர்ந்த பதிவு.

0
11461
samantha
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா சமந்தா ஜோடி 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி கடந்த 2ஆம் தேதி விவாக ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் நாகசைதன்யா விட சமந்தா தான் சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய நெருங்கிய தோழியுடன் ஹெலிகாப்டரில் ஆன்மீக பயணத்தை துவங்கி இருந்தார்.

விவாகரத்துக்கு பின்னர் நாக சைதன்யா பெரிதாக எதுவும் சமூக வலைதளத்தில் பதிவிடுவது இல்லை. ஆனால், நடிகை சமந்தா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்பங்களையும் சில வாழ்க்கை தத்துவங்களையும் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் பெண் குழந்தை வளர்ப்பு குறித்து நடிகை சமந்தா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : ஷாருக்கான் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா – அவருக்கு பதில் இந்த தமிழ் நடிகை தானாம்.

- Advertisement -

சமீபத்தில் இந்திய அணியின் ஹாக்கி வீராங்கனையான ராணி ராம்பாலின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்து உள்ளார் சமந்தா. அந்த ஸ்டோரியில் குறிப்பிடபட்டுள்ளதாவது ‘உங்கள் மகளை மிகவும் திறமையானவராக ஆக்குங்கள். அதனால் அவளை யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவளுடைய திருமண நாளுக்காக பணத்தைச் சேமிப்பதற்குப் பதிலாக, அவளுடைய கல்விக்காக செலவு செய்யுங்கள்.

This image has an empty alt attribute; its file name is 1-228-577x1024.jpg
மிக முக்கியமாக, அவளை திருமணத்திற்கு தயார் செய்வதர்க்கு பதிலாக அவளை தயார் செய்ய செலவிடுங்கள். அவளுக்கு தன்னை விரும்பும் பக்குவத்தையும், தன்னபிக்கையையும் கற்றுக்கொடுங்கள். இதன் மூலம் அவள் தேவைப்பட்டால் அவள் நினைக்கும் நபர்களின் வாயை கூட ஒரு அடி கொடுத்து வாய் அடைக்கலாம் என்று அந்த ஸ்டோரியில் குறிப்பிடபட்டுள்ளது.  இந்த ஸ்டோரியை பகிர்ந்த சமந்தா வலிமையை குறிக்கும் எமோஜி ஒன்றையும் போட்டு இருக்கிறார். 
Advertisement