ஷாருக்கான் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா – அவருக்கு பதில் இந்த தமிழ் நடிகை தானாம்.

0
1804
Atlee
- Advertisement -

அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் இருந்து நயன்தாரா விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா திகழ்ந்து வருகிறார். சமீப காலமாகவே இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. அதிலும் நயன்தாரா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நெற்றிக்கண் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

LEAKED! Shah Rukh Khan's pumped-up look from Atlee's next will impress you  – see pic

இதனை தொடர்ந்து தற்போது நயன்தாரா அவர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, சமந்தா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் இருந்து தற்போது நயன்தாரா விலகி இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இதையும் பாருங்க : ஆரியின் நெடுஞ்சாலை படத்தில் நடித்த நடிகையா இது ? புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

- Advertisement -

அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு லயன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படம் அதிரடி ஆக்சன் கதைக்களத்தை கொண்டது ஆகும். அதோடு இந்த படம் ஒரு வங்கியை ஹீரோ கொள்ளையடிக்கும் கதை அம்சத்தை கொண்டது என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

Samantha Akkineni wishes director Atlee on his birthday; Says 'So proud of  all of your achievements' | PINKVILLA

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புனே நகரில் தொடங்கப்பட்டது. இதில் நயன்தாரா, ஷாருக்கான் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நயன்தாரா திடீரென்று விலகி உள்ளார். மேலும், இந்த படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், நயன்தாரா ஏன் இந்த படத்தில் இருந்து விலகினார்? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து சோசியால் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement