தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சமீரா ரெட்டி. இவர் பாலிவுட் திரையுலகில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
பிறகு 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை சமீரா ரெட்டி திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவர் முழு கவனமே குடும்பத்தில் செலுத்தி வந்தார். பின் நடிப்பிலிருந்து முழுவதும் குட் பை சொல்லிவிட்டார். தற்போது சமீராவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீரா ரெட்டி அவர்கள் மேக்கப் எதுவும் இல்லாமல் நரைத்த தலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இதையும் பாருங்க : உண்மையிலேயே விஜய் சிறந்த நடிகரும் இல்ல, சூப்பர் ஸ்டாரும் இல்ல – சீனியர் மலையாள நடிகர்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து கமெண்ட் போட்டு வந்தனர். இதுகுறித்து கூறிய சமீரா, முன்பு போல் நான் அதற்கெல்லாம் கவலைப்படுவதில்லை. முதலில் வழக்கமாக பிறர் என்னுடைய நரைமுடியை பார்த்துவிடக்கூடாது என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தலை முடிக்கு கருப்பு நிறம் பூசி வந்தேன்.
ஆனால், தற்போது எனக்கு நேரம் கிடைக்கும் போது தான் அதுவும் எனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் தான் பூசுகிறேன்.பழைய நடைமுறைகளை உடைக்கும் போது தான் புதிய மாற்றங்கள் தொடங்குகின்றன. ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன மாற்றங்களின் வழியாக நாம் முன்னேறி சென்று பலவற்றை கற்றுக் கொண்டிருக்கிறோம். அவை சிறிய அளவில் இருந்தாலும் பெரிய இடங்களுக்கு கொண்டு செல்கிறது என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை உங்களுக்கு 42 வயதுதான். உங்கள் வயதில் இருக்கும் பல்வேறு பாலிவுட் நடிகைகள் இன்னமும் இயற்கையான கருமை நிற முடியுடன் தான் இருக்கிறார்கள். ஆனால், உங்கள் முடி மட்டும் ஏன் இவ்வளவு விரைவாக வெள்ளையாகி விட்டது என்று கமெண்ட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த சமீரா ரெட்டி இதை பற்றி வெளிப்படையாக பேசினால் தான் மாற்றம் ஏற்படும்.
பல்வேறு பெண்கள் இதனை மறைத்து விடுகிறார்கள். பலர் அதை செய்வதில்லை. இதை நாம் எடை போடக்கூடாது, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். சமீரா ரெட்டியின் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த பிரபல நடிகை ராதிகாவின் மகள் ரேயான் எனக்கு 29 வயது தான். ஆனால்,பிரசவத்திற்கு பின்னர் 50% வெள்ளை முடி வந்துவிட்டது. வயதுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறேன்