பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. கெளதம் மேனன் இயக்ககத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார்.
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி அஜித் நடித்த சிடிஸின் படத்திலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற பல மொழிகளில் நடித்து வந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இதையும் பாருங்க : உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய வித்யூ ராமன்.! வியந்த ரசிகர்கள்.!
பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.
தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார் . சமீபத்தில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.