சாமி – 2 படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதா ? – புதிய டைட்டில் என்ன?

0
786
vikram
- Advertisement -

கடந்த 2003 ஆம் ஆண்டு விக்ரம், ஹரி கூட்டணியில் வெளிவந்த சாமி படம் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டது. அந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரியின் மார்க்கெட் வேற லெவலிற்கு சென்றது. அதன் பிறகு பல அதிரடி ஆக்சன் படங்களை இயக்கிய ஹரி, கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் விக்ரமை வைத்து இயக்க உள்ளார்.

vikramமுதல் பாகத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாகி நடித்திருந்தார். அவரோடு சேர்ந்து கீர்த்தி சுரேசும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதோடு பாபி சிம்ஹா இந்த படத்தின் வில்லனாக நடிப்பார் என தெரிகிறது.

இந்த படத்தின் படபிடுப்பு நேற்று துவங்கிய நிலையில், சாமி-2 என்ற தலைப்பிற்கு பதிலாக “சாமி ஸ்கொயர்” என்று தலைப்பு மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement