சமூகத்திற்கு மிக அவசியமான கருத்தை கூறவரும் பியூட்டி- எப்படிபட்ட படம்?

0
543
- Advertisement -

ஓம் ஜெயம் தியேட்டர் சார்பில் ஆர்.தீபக் குமார் தயாரித்து ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் “பியூட்டி” இப்படம் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் கோ.ஆனந்த் சிவா திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் கதாநாயகனாக ரிஷி நடிக்க கதாநாயகியாக கரீனா நடித்திருக்கிறார். மேலும் காயா கபூர், ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சிங்கமுத்து போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும் இப்படத்தை தயாரித்த ஆர். தீபக் அவர்களே படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களை தமிழக தலைமை செயலளார் மற்றும் எழுத்தாளர் வெ. இறையன்பு இப்படத்திற்கு பாடல்களை எழுதியுள்ளார். அதோடு கூல் ஜெயந்த் நடனக்காட்சிகளை வடிவமைத்து சங்கர் கே.படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

- Advertisement -

இப்படத்தின் இயக்குனர் கோ.ஆனந்த் அவர்கள் கே.பாக்யராஜின் பத்திரிகையில் பல வருடங்கள் பணியாற்றியதோடு கே.பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் கோ.ஆனந்த் இப்படத்தை கமர்சியல் படமாக இயக்கினாலும், சமூகத்திற்கு தேவையான படமாக நல்ல கருத்தை கொண்ட படமாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

இந்நிலையில் தான் கடந்த 4ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ், கே.ராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய இயக்குனர் ஆனந்த் சிவா “நான் ஒருமுறை முற்றிலும் வித்தியாசமான, எதிர்மறை எண்ணம் கொண்ட ஒருவரிடம் பழக்க நேர்ந்தது. அவரின் செயல்பாடுகள் என்னை பெரிதும் பாதித்தது. அவரிடம் நான் பார்த்த சில அதிர்ச்சிகரமான விஷியங்களை கதையாக எழுதி, இயக்கியிருக்கும் படம் இந்த “பியூட்டி” படம்.

-விளம்பரம்-

போதை என்றால் கூட மணம், நிறம், சுவை என ஒவொருவரும் ஒவ்வொன்றை விரும்புவார்கள், அதே போலத்தான் என்னுடைய படத்தின் கதாநாயகனும் இருக்கிறார், ஆனால் கதையாகி முற்றிலும் வேறுபட்டவர். அவர்களுக்கு இடையே உருவாகும் காதல் எப்படி வளர்ந்தது, அவர்கள் வாழ்க்கையில் எப்படி சிக்கல்கள் வருகின்றன என சினிமாவுக்கே உரிய பாணி மூலம் உருவாக்கி இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் நல்ல வெற்றிப்படமாக இருக்கும் என்று கூறினார். இந்நிலையில் இந்த படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisement