தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சமுத்திரக்கனி. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘உன்னைச் சரணடைந்தேன்’. இது தான் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாம். இதில் கதையின் மிக முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு, எஸ்.பி.பி. சரண், மீரா வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ‘புரட்சி கலைஞர்’ விஜய காந்தின் ‘நெறஞ்ச மனசு’, எம்.சசிக்குமாரின் ‘நாடோடிகள் 1 & 2, போராளி’, ‘ஜெயம்’ ரவியின் ‘நிமிர்ந்து நில்’ போன்ற சில படங்களை இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.
ஒரு இயக்குநராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிகராக களமிறங்க முடிவெடுத்தார். அதன் பிறகு ‘சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி 1 & 2, காடு, சண்டமாருதம், மாசு என்கிற மாசிலாமணி, காவல், காமராஜ், அதிபர், பாயும் புலி, தற்காப்பு, ரஜினி முருகன், விசாரணை, காதலும் கடந்து போகும், அம்மா கணக்கு, அச்சமின்றி, நிமிர், மதுர வீரன், கோலி சோடா 2, வட சென்னை, ஆண் தேவதை, காப்பான், அடுத்த சாட்டை, சில்லுக் கருப்பட்டி’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி
‘அப்பா, தொண்டன்’ போன்ற படங்களை இயக்கி, நடித்திருந்தார் சமுத்திரக்கனி. மேலும், இவர் இயக்கிய மற்ற சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி இயக்குநர் ஆவதற்கு முன்பு சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஜன்னல் – சில நிஜங்கள் சில நியாயங்கள்’, பொதிகை டிவியில் ஒளிபரப்பான ‘கடவுளுக்கு கோபம் வந்தது’, ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம், ரமணி vs ரமணி பார்ட் 2’ போன்ற டிவி சீரியல்களில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இப்போது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் பக்கத்தில், ‘ரமணி vs ரமணி’ சீரியலின் பார்ட் 2-வில் சமுத்திரக்கனி நடித்திருந்த காட்சியின் வீடியோ வெளி வந்து வைரலாகி வருகிறது.