என்ன பழிவாங்கிட்டார் – ரவி, விஷ்ணுகாந்தை தொடர்ந்து ஹரீஷ் மீதும் சம்யுக்தா குற்றச்சாட்டு. யார் இந்த ஹரிஷ் ?

0
1499
Samyuktha
- Advertisement -

கடந்த சில நாட்களாக யூடுயூபில் பெரிய பஞ்சாய்த்தாக சென்று கொண்டு இருப்பது விஷ்ணுகாந்த் – சம்யுக்தா விவகாரம் தான். இந்த நிலையில் இவர்களது பஞ்சாயத்தில் புதிததாக சிக்கி இருப்பவர் vj ரவி. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

ஆதாரங்களை வெளியிட்ட விஷ்ணுகாந்த் :

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார்.இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார்.

எல்லை மீறிய ரவி :

ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர்கள் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் சமித்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் தங்கள் இருவருக்கும் பொதுவான நபர்களிடம் ரவி குறித்து தெரிவித்து இருக்கிறார் சம்யுக்தா. ஆனால், சம்யுக்தா தன் பெயரை கெடுக்க இப்படி எல்லாம் செய்கிறார் என்று ரவி தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரசிகர் கேட்ட கேள்வி :

இப்படி ஒரு நிலையில் சம்யுக்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர் ஒருவர் ‘ அக்கா ஏன் ரவி அண்ணா மேல தப்பு தப்பா பழி சுமத்துறீங்க. அவங்க அப்படி என்ன துரோகம் உங்களுக்கு பண்ணிட்டாங்க? ரொம்ப கஷ்டமா இருக்கு. ரவி அண்ணா மேல இப்படி எல்லாம் பழி சொல்லாதீங்க. ரவி அண்ணா ரொம்ப ஜெனியூன் மேன். நானும் உங்களோட ஃபேன் தான். ரெண்டு கண்ணுல எந்த கண்ணு வேணும்னு கேட்டா நான் எப்படி சொல்லுவேன்.

சம்யுக்தா கொடுத்த விளக்கம் :

நீங்க ரெண்டு பேரும் எனக்கு இம்பார்டன்ட் தான். நீங்க ரவி அண்ணாவை லவ் பண்ணி இருக்கீங்க பட் அவங்க அக்செப்ட் பண்ணலன்னு இப்படி தப்பா சொல்ல கூடாது!? அக்கா ஐ அம் வெரி சேட் என்று பதிவிட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த சம்யுக்தா ‘ஒரு ரசிகரா உங்களுடைய பீலிங்ஸ் நான் ரெஸ்பெக்ட் பண்ணுறேன். நான் அவர் கூட ஒரு வருஷம் டிராவல் பண்ணி இருக்கேன். உங்களுக்கு நாங்க ஆன்ஸ்கிரீன்ல என்ன நாங்க நடிச்சமோ அது மட்டும்தான் தெரியும்.

அண்ணனு நெனச்சி சொன்னேன் :

நான் என் அண்ணன்னு நெனச்சு ஒருத்தர்கிட்ட சொன்னேன். அவர் தான் கேவலமா ரெக்கார்ட் பண்ணி விஷ்ணுகாந்துக்கு அனுப்பி, அவர் அதை மீடியால கொடுத்து இப்ப பெரிய நியூஸா போயிட்டு இருக்கு. ஒரு பொண்ணு வெட்கத்தை விட்டு ஓபனா இதை சொல்றத சுச்சுவேஷனுக்கு வந்து இருக்கானா, அவ எவ்ளோ கஷ்டத்துல இருப்பா? அத உங்களுக்கு புரிஞ்சிக்க முடியல. ஆனாலும் ஓகே நான் எந்த பொய்யும் சொல்லல. பொய் சொல்றதுக்கான அவசியமும் எனக்கு கிடையாது என்று பதில் கொடுத்திருக்கிறார்.

ஆடியோவை வெளியிட்ட இயக்குனர் :

ஆனால், சம்யுக்தாவின் இந்த ஆடியோவை வெளியிட்ட அந்த நபர் யார் என்ற கேள்வியும் இருந்து வந்தது. அது வேறு யாரும் இல்லை இயக்குனர் ஹரிஷ் என்பவர் தான். இவர் சம்யுக்தா மற்றும் ரவி நடித்த ‘நிறைமாத நிலவே’ தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தனது உடன்பிறந்த அண்ணன் போல நம்பி சம்யுக்தா அனைத்தையும் சொல்லை இருக்கிறார். ஆனால், இவர் தான் இவரிடம் பேசிய விஷங்களை ரெகார்ட் செய்து வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து சம்யுக்தா பேசுகையில் ”நிறைமாத நிலவே வெப்சீரியஸுக்காக எனக்கு இரண்டு விருதுகள் கிடைத்தது. ஆனால், இயக்குநருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அந்த பொறாமையால் என் மீதும் ரவி மீதும் கோபத்திலிருந்தார். எனவே தான் அந்த ஆடியோவை விஷ்ணுகாந்துக்கு அனுப்பி என்னையும், ரவியையும் கேவலப்படுத்தி பழிவாங்கிவிட்டார்’ என்று கூறியுள்ளார் சம்யுக்தா.

Advertisement