தனது நியாயத்தை சொல்ல போராடும் முத்து, கோபப்பட்டு அடித்த அண்ணாமலை – கலங்கி நிற்கும் மீனா.

0
525
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் அவருக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்த வாரம் சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார். பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். போலீசில் ஜீவா பணம் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள். பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நம்புகிறார்கள். ஆனால், முத்து மட்டும் சந்தேகப்படுகிறார்.

சீரியல் கதை:

மேலும், பணம் எப்படி வந்தது என்று மாத்தி மாத்தி முத்து மனோஜ் -ரோகினி இடம் கேள்வி கேட்கிறார். இதனால் கடுப்பான விஜயா திட்டுகிறார். பின் வீட்டில் மனோஜ் இந்த பணத்தை வைத்து வட்டிக்கு விடப் போகிறேன் என்று சொல்கிறார். உடனே ரோகினி, எனக்கு அந்த பணத்தை வட்டிக்கு கொடு நான் சரியாக கட்டுகிறேன் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொள்கிறார். பின் முத்து அரசியல்வாதி ஒருவருக்கு கார் பேசி வாங்கி கொடுக்கிறார். அப்போது மீனாவை பழிவாங்க சிட்டி நினைக்கிறார். கார் வாங்கியதற்காக அரசியல்வாதி பார்ட்டி வைக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இருந்தும் முத்து சாப்பிடாமல் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு செல்கிறார். ஆனால், இதை பார்த்த சிட்டி, முத்து குடிப்பது போல வீடியோ எடிட் செய்து சோசியல் மீடியாவில் பதிவிடுகிறார். இதை பார்த்தவர்களும் முத்துவை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். அந்த வீடியோவை மீனாவின் தம்பி சத்யா, வீட்டில் உள்ள எல்லோருக்கும் காண்பிக்கிறார். அதை பார்த்து மீனா அதிர்ச்சி ஆகிறார். இன்னொரு பக்கம் வீடியோ முழுவதுமே எல்லோருக்குமே கிடைக்கிறது. ஸ்ருதி, ரோகிணி எல்லோருமே முத்துவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

சுருதியின் அப்பா போலீசுக்கு போன் செய்து விபரத்தை சொல்கிறார். பின் முத்து கார் ஓட்டி கொண்டு வரும்போது போலீஸ் அவரை மடக்கி காரை எடுத்து செல்கிறார்கள். முத்து தன் மீது தவறு இல்லை என்று எவ்வளவோ போராடியும் போலீஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில், வீட்டில் எல்லோருமே முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் ரோகினி, மனோஜ், விஜய் எல்லாரும் முத்துவை திட்டுகிறார்கள். தன் பக்கம் நியாயத்தை முத்து பேசும்போது யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கோபப்பட்ட அண்ணாமலை, முத்துவை அடித்து விடுகிறார். இனி வரும் நாட்களில் முத்து பக்கம் இருக்கும் நியாயம் புரிய வருமா? மீனா என்ன செய்யப் போகிறார்? அண்ணாமலை- முத்து இடையே விரிசல் உருவாகுமா? போன்ற விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement