அவரை நம்பி ஏமாந்துவிட்டேன், எனக்கு 25 வயசு தான் ஆனா அவருக்கு – விஷ்ணுகாந்த் பேட்டிக்கு பின் லைவ் வந்த சம்யுக்தா.

0
2274
SAMYUKTHA
- Advertisement -

கடந்த சில தினங்களாக சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா திருமண விஷயம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோவின் தம்பியாக அபினவ் என்ற சீரியலில் நடித்தவர் தான் விஷ்ணுகாந்த். இதனிடையே இவர் சிப்பிக்குள் முத்து சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து வந்தார். இது குறித்து இருவருமே பகிரங்கமாக அறிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விஷ்ணுகாந்த் தங்களுக்கு இன்னும் விவாகரத்து எல்லாம் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் அவர் நண்பர்களுடன் பேசி வந்தால். அதை ஏன் என்று கேட்டதற்கு நான் அப்படித்தான் பேசுவேன் என்றார். சரி, நான் முக்கியமா அவன் முக்கியமா என்று கேட்டதற்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிவிட்டால். இப்படித்தான் பிரச்சினை ஆரம்பமானது. மேலும், இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் அவரது தந்தை தான். அவரது தந்தை இவளை விட்டு விட்டு எப்போதோ சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது திடீரென்று மீண்டும் வந்திருக்கிறார்.அவள் இப்போது சில தப்பான விஷயத்தை செய்து கொண்டு இருக்கிறாள் அதற்கு அவரது தந்தையும் உடந்தையாக இருக்கிறார். இருவருக்கும் இருக்கும் பிரச்சனை அமர்ந்து பேசினாலே தீர்ந்துவிடும். ஆனால், அவள் எனக்கு பேசக்கூட வாய்ப்பை கொடுக்கவில்லை. இப்படி தொடர்ந்து பல பிரச்சினைகள் வந்து கொண்டு இருப்பதால்தான் நாங்கள் இருவரும் தனியாக இருக்கின்றோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஷ்ணுகாந்தின் இந்த பேட்டியை தொடர்ந்து சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் மூலம் விஷ்ணுகாந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் விஷ்ணுகாந்த் அளித்த பேட்டியில் அவர் சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி வைத்திருக்கிறார். அந்த வீடியோவில் விஷ்ணுகாந்த் அளித்த பேட்டியில் அவர் சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதிலடி வைத்திருக்கிறார் அதில், விஷ்ணுகாந்த்தை நம்பி நான் ஏமாந்துவிட்டேன்.

எனக்கு 22 வயதுதான், அவருக்கும் எனக்கும் 10 ஆண்டுகள் வித்தியாசம். இருப்பினும் எனது பெற்றோரிடம் அடம்பிடித்து என்னை திருமணம் செய்துகொண்டார். என் ஜாதகப்படி 25 வயதுக்குள் திருமணம் நடந்தால் அந்த திருமணம் நிலைக்காது, இரண்டாவது திருமணம்தான் நிலைக்கும் என்று இருக்கிறது. இதை நானும் எனது அம்மாவும் விஷ்ணுகாந்துவிடம் கூறி இருக்கிறோம். ஆனால், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சம்யுதாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று கூறி தான் விஷ்ணுகாந்த் என்னை திருமணம் செய்துகொண்டார். நாம் இருவருக்கும் கடைசியாக சண்டை வந்த போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று நினைவிருக்கிறதா அப்போது நான் பீரியட்ஸ் ஆகி இருந்தேன். அந்த பீரியட்ஸ் சமயத்தில் நான் எந்த அளவிற்கு கஷ்டப்படுவேன் என்பதை என்னுடைய தோழிகளை கேட்டால் தெரியும்.

என்னால் நிற்கக்கூட முடியாது, மற்ற பெண்களைப் போல அல்லாமல் என்னுடைய வலி மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். அந்த வலியில் கூட அவர் என்னை வீட்டை விட்டு வெளியில் செல்ல சொன்னார். நான் என்னுடைய துணிமணிகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது கூட ஏன் இவ்வளவு நேரம் ஆக்குகிறாய், எனக்கு நேரம் ஆகிவிட்டது. நீ சென்றால் தான் நான் என்னுடைய காரை எடுத்துச் செல்ல முடியும், சீக்கிரம் கிளம்பு என்று சொன்னார். இது போன்ற விஷயத்தை ஒரு பெண்ணால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement