மஞ்சு வாரியர் மாதிரி ஆகிட்டிங்க- சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்

0
420
- Advertisement -

சனம் செட்டியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சனம் செட்டி. இவர் பெங்களூரை சேர்ந்தவர். தமிழ்நாட்டில் தான் வசித்து வருகிறார். இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர். இவர் மாடல் அழகியும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா என்ற பட்டத்தையும் பெற்று இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். ஆனால், இவரால் நிகழ்ச்சியில் ரொம்ப நாள் நீடிக்க முடியவில்லை.

- Advertisement -

சனம் -தர்சன் குறித்த சர்ச்சை:

நிகழ்ச்சிக்கு பின் இவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. ஆனால், இவருக்கும் பிக் பாஸ் தர்சனுக்கும் தொடர்பு இருப்பதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்து இருந்தது. தர்ஷன் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தங்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்றும் சனம் ஷெட்டி ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் பல சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

சனம் நடிக்கும் படங்கள்:

பின் சனம் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ‘குருதி களம்’ என்ற வெப் தொடரில் சனம் நடித்து இருந்தார். இயக்குனர் ராஜபாண்டி மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து இயக்கிய இந்த வெப் தொடரில் சந்தோஷ் பிரதாப் மாரிமுத்து, வின்செண்ட் அசோகன், ஶ்ரீகாந்த், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்து இருந்தனர். பின் சமீபத்தில் ஹன்சிகா நடிப்பில் வெளியாகியிருந்த மகா படத்தில் சனம் நடித்திருக்கிறார். தற்போது இவர் வெப்சிரிஸ் மற்றும் படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் சனம்:

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி நடத்தும் போட்டோ சூட் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரின் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கெட்டபில் சனம் செட்டி போட்டோ ஷூட் நடித்திருந்தார்.

கேலி செய்யும் ரசிகர்கள்:

அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் சனம் செட்டியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேலி செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, தற்போது சனம் செட்டியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் மஞ்சு வாரியர் கெட்டப்பில் இருக்கிறார். இதை பார்த்து பலருமே மஞ்சுவாரியர் மாதிரி ஆக்டிங்க என்றெல்லாம் கிண்டல் கேலி செய்து விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement