20 வருடத்திற்கு முன் விவேக் நடித்த படத்தின் மூலம் ஜாதி ஒழிப்பு விழிப்புணர்வு செய்த சாண்டி.

0
4766
vivek
- Advertisement -

சினிமா திரை உலகில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி பத்தி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு பிரபலமானவர் மாஸ்டர் சாண்டி. இவர் ஒரு திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் சினிமா திரைப்படங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் நடன ஆசிரியராகவும், பல மேடை நடனங்களையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். சாண்டி அவர்கள் பிரபலமான நடன கலைஞர் கலா மாஸ்டரின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் தான் அறியப்பட்டார். அதற்கு பின் இவர் சினிமா துறையில் நடன ஆசிரியராக மாறி உள்ளார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதில் சாண்டி இரண்டாம் இடத்தையும் பிடித்தார்.

-விளம்பரம்-

மேலும், சாண்டி மாஸ்டர் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டே இருப்பார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கூட சாண்டி அவர்கள் வித்தியாசம் வித்தியாசமாக பாடல்களை எழுதி பாடியிருந்தார். அதிலும் இந்த ‘வி ஆர் தி பாய்ஸ்’ பாடல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அந்த வகையில் தற்போது சாண்டி மாஸ்டர் கொரோனா வைரஸ் குறித்து பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சென்னை, காஞ்சிபுரத்தை விடுங்க. ஈரோட்டை தனிமைபடுத்த காரணம் என்ன தெரியுமா?

2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சாமி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் விவேக் அவர்களின் நடிப்பு தூள். இந்த படத்தில் நடிகர் விவேக் அவர்கள் நிறைய சமூக நலன் விஷயங்களை சொல்லி இருப்பார். அந்த வகையில் சாமி படத்தில் விவேக் ஜாதி, மதம் எல்லாம் ஒன்று தான் என்ற ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது சாண்டி அவர்கள் விவேக் சொன்ன கருத்தை(மெஸ்சேஜ்) தன்னுடைய நடனத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நடிகர் விவேக் அவர்கள் 20 வருடங்களுக்கு முன் நடித்த படத்தை உங்கள் நடனம் மூலம் மீண்டும் ஞாபகப் படுத்தி இருக்கிறீர்கள். இதை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் ஒரு பிரமாதமான நடன கலைஞர்.

என்னுடைய படத்தில் இருந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடியதற்கு நன்றி என்று கூறியிருந்தார். மேலும், இந்த விடீயோவிற்க்கு கீழ் ரசிகர்கள் சிலர், நீங்கள் என்னதான் சொன்னாலும் இங்கே ஜாதி மதம் ஒழியாது என்று வருத்தப்பட்டு கமன்ட் செய்துள்ளனர். ஆனால், சாமி படம் வந்தது 2003 ஆம் ஆண்டு. அப்படி இருக்க எப்படி 20 வருடத்திற்கு வந்த படம் என்று சொல்கிறீர்கள் விவேக் சார் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement