மகனின் புகைப்படத்தை முதன் முறையாக வெளியிட்ட மாலிக் மற்றும் சானியா மிர்சா..!

0
1067
saniya-mirza

இந்தியாவின் டென்னில் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல்வேறு பிரச்சனைகளை கடந்து நடைப்பெற்றது அனைவரும் அறிந்த ஒன்று.

கடந்த ஏப்ரல் மாதம்  சானியா மிர்சா தான் கர்ப்பமாக இருப்பதாக கடவுளுக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் 31 வயதான சானியா மிர்சாவிற்கு ஆண்குழந்தை பிறந்தது.

- Advertisement -

இந்த செய்தியை அவரின் கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சானியா-மாலிக் தம்பதி தங்களது குழந்தைக்கு, இஜான் மிர்சா மாலிக் என்று பெயர் சூட்டினர். இந்நிலையில் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர் மாலிக் மற்றும் சானியா மிர்சா தம்பதியினர்.

-விளம்பரம்-

Advertisement