ஜெயிலர் பட வாய்ப்பை நம்பி லட்சம் இழந்த மாடல் அழகி – படத்துல நடிக்கிறேன்னு இன்ஸ்டாவுல எல்லாம் போட்டு இருக்கார் பாவம்.

0
637
- Advertisement -

ரஜினி படத்தில் நடிக்க வைப்பதாக கூறி மாடல் நடிகை ஒருவரிடம் பல லட்சங்கள் ஏமாற்றி இருக்கும் தகவல் தற்போது ஷோவில் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-
jailer

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார்.

- Advertisement -

ஜெயிலர் படம்:

மேலும், இந்த படம் நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்- அனிரூத் கூட்டணியில் உருவாகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மாடல் நடிகை சுன்னா சுரி :

இந்த நிலையில் தான் ஜெயிலர் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடக்க வைப்பதாக மும்பை மாடல் நடிகை ஒருவரை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது மும்பையை சேர்ந்த வெர்சோவா என்ற பகுதியில் வலது வருபவர் 29 வயதாகும் சுன்னா சுரி. இவரை பிளாக்கிளாத் ஈவண்ட்ஸ் என்ற இணயத்தளத்தில் இருந்து பியூஷ் ஜெயின் என்பவர் இன்ஸ்டாகிராமில் மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படத்தில் வாய்ப்பு :

அவர் தன்னை ஒரு காஸ்டிங்க் டைரக்டர் என்று அறிமுகம் செய்த்திருக்கிறார். மேலும் உங்களை ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் பெண் போலிஷ் கதாபாத்திரத்தில் நடக்க ஆட்கள் தேவைப்படுவதாக கூற பின்னர் மாடல் அழகி சுன்னா சுரி பேசியிருக்கிறார். பின்னர் சில காலம் கழித்து இவர்களை தொடர்பு கொண்ட அந்த நபர் பின்னர் போலீஸ் உடையில் நடிக்க தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்து ஜெயிலர் பட போஸ்டர் ஒன்றையும் கொடுத்துள்ளார் இதனால் அம்மா மற்றும் மகள் ஆனந்தத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

8.48 லட்சம் மோசடி :

இந்த நிலையில் இவர்களை தொடர்பு கொண்ட சமீர் செயின் என்ற மற்றொரு நபர் ரஜினி படத்தில் நடிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்பதினால் விமான டிக்கெட்டுகள் எடுக்க ரூபாய் 8 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தான் ஜெலியிலர் பட உதவி இயக்குனர் மாடல் அழகியின் அம்மாவை தொடர்பு கொண்டு ஷோவில் மீடியாவில் போட்டுள்ள போஸ்டர் போலியானது என்றும் எங்களிடம் இருந்து யாரும் உங்களை தொடர்பு கொள்ளவில்லை என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

போலீசில் புகார் :

இதனை கேட்ட மாடல் அழகி சுன்னா சுரியின் தாய் அதிர்ச்ச்சிடைந்து மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் பியூஸ் ஜெயின் மற்றும் சமீர் ஜெயின் மீது ரூபாய் 8 லட்சத்து 48ஆயிரம் ரூபாய் மோசடி செய்தாக புகார் அளித்த்துள்ளார். இதனையடுத்து வழக்க பதிவு செய்த போலீசார் மோசடி செய்த நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement