என் போட்டோவ போட்டு அமித் ஷா அவர்களே வருகனு போஸ்டர் அடிச்சிருக்கானுங்க – வைரலாகும் சந்தானபாரதியின் வீடியோ.

0
3397
amit
- Advertisement -

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று (நவம்பர் 21)சென்னை வந்தார். காலை 10.50 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் நேரில் சென்று அமித் ஷாவை வரவேற்றனர். விமான நிலையத்திற்கு வெளியே பாஜக மற்றும் அதிமுக சார்பில் தொண்டர்கள் கலை நிகழ்ச்சிகளுடன் அமித் ஷாவை உற்சாகமாக வரவேற்றனர்.

-விளம்பரம்-

இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, அங்கிருந்து காரில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார். அமித் ஷா வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அமித் ஷாவின் வருகையை எதிர்த்து ட்விட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் நடிகர் சந்தான பாரதியை அமித் ஷாவுடன் ஒப்பிட்டு பலர் கேலி கிண்டல்களை செய்து வருகின்றனர்.

- Advertisement -

தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி. மேலும்,இவர் 1986 ஆம் ஆண்டு ‘என்னுயிர் கண்ணம்மா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதோடு இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனரும் ஆவார். மேலும், இவருடைய பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சந்தானபாரதி அவர்கள் இயக்கிய குணா, மகாநதி போன்ற படங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதோடு இவர் பிரபல இயக்குனர் பி.வாசுவுடன் இணைந்து பல படங்களை இயக்கி உள்ளார்.

இவரை பெரும்பாலான கமல் படங்களில் கண்டிப்பாக பார்த்துவிட முடியும். மேலும்,80 கால கட்டங்களில் தொடங்கி தற்போது வரை பல வெற்றிப் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி என்றும் சொல்லலாம். தற்போது இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவரை பலரும் மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவுடன் ஒப்பிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அமித் ஷா தமிழக வருகையை ஒட்டி இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து அமித் ஷாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

அன்பே சிவத்துல நீங்க திருந்துனீங்க. உங்கள கடவுள்னு ஆண்டவர் ஏத்துக்கிட்டாரு. ஆனா ரியல் லைஃப்ல நீங்க திருந்துனாலும் திருந்தலன்னாலும் எங்களுக்கு நீங்க வேண்டாம் சார். ஏன்னா எங்களுக்கு இந்துத்துவம் வேண்டாம் என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தன்னை அமித் ஷா என்று நினைத்து BJP கட்சியினர் தன்னுடைய புகைப்படத்தை போட்டு அமித் ஷா வருக என்று போஸ்டர் அடித்து இருந்ததாக சந்தான பாரதி பேசிய வீடியோ ஒன்றும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement