சந்தானம் கிண்டல் செய்த இயக்குணரின் படத்திலேயே ஹீரோவா நடிக்க போறாரா – அந்த இயக்குனர் யார்

0
2003
san
- Advertisement -

ஒரு காலத்தில் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்தவர் சந்தானம். இவர் சென்னை அருகில் உள்ள பொலிச்சலூர் என்ற இடத்தில் 1980 ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு படிப்பு அதிகமாக வராதாம், ஆனால் குரும்பில் நெ.1ஆம்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும் சந்தானம் டிப்ளமோ படித்துள்ளார். படிப்பு முடித்ததும் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு கிடைத்த நண்பர்கள் மூலம் பிக் டீவி சேனனில் தனது ஆர்வத்தினால் பெட்டி மன்றம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு கதை எழுதியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்தின் மூலம், 2001ல் விஜய் டீவியில் பல ஷோக்களுக்கு கதை எழுதினார். ஆனால் அதில் அவர் நடித்த லொள்ளு சபா பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக 2002ல் வந்த பேசாத கண்ணும் பேசுமே, காதல் அழிவதில்லை போன்ற படங்களில் சின்ன சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் நன்றாக நடிக்க, சிம்பு தனது மன்மதன் படத்தில் பாபி என்ற முழு நீள கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதிலும் கலக்கிய சந்தானம் காட்டில் படமாக குவிந்தது.

-விளம்பரம்-

விஜயின் சச்சின், அஜித்தின் பில்லா, ரஜினியின் எந்திரன் உள்ளிட்ட பட ஹிட் படங்களில் நடித்தார் சந்தானம். தற்போது வரை 100 படங்களில் நடித்துள்ள சந்தனம் சைமா, விஜய் டீவி சிறந்த காமெடியன் விருதுகள் என பலவிருதுகள் பெற்றுள்ளார்.

தற்போது தனது முயற்சியால் Handmade Films என்ற பட தயாரிப்பு கம்பெனியை நிறுவி ஹீரோவாக நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் அவருடைய சக்க போடு போடுராஜா படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனை தாண்டி 7G ரெயின்போ காலனி படத்தை கிண்டல் செய்து நடித்த சந்தானம் தற்போது அந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்திலேயே நடிக்கப் போகிறார் என்பது அவரது சாதனையின் உச்சம். இதனை சாதனைகளை படைத்த சாதனை மன்னன் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு Behind Talkies சார்பாக பிறந்தாநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Advertisement