AK62 : அஜித்துக்காக மனம் மாறிய சந்தானம்வில் சந்தானம். ஹீரோ கெத்தை விட்ட காரணம்.

0
732
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம், இவர் தொடக்க காலத்தில் காமெடியனாக நடித்தாலும் தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தல அஜித்துடன் AK62வில் சந்தானம் நடிக்க இருகிறார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச தொடங்கியுள்ளன. மேலும் இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

அதாவது தற்போது கிடைத்துள்ள தகவல் படி துணிவு படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் விகேஷ் சிவம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்க்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களிடம் தேதிகள் கேட்டு பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காமெடி நடிகரான சந்தானம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

- Advertisement -

நடிகர் சந்தானம் இறுதியாக அஜித் நடித்திருந்த “வீரம்” திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் முழு கதையையும் அஜித்திடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கதை பிடித்தால் இதில் வரும் முக்கியமான கதாபாத்திரத்திற்கு யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று அஜித் விக்னேஷிடம் கேட்டிருக்கிறார். இதற்கு விக்னேஷ் சந்தானம் அவர்களை நடிக்க வைக்கலாம் என்று சொல்ல அஜித்தும் அவர் சரியாக இருப்பார் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து நடிகர் சந்தானத்திடம் இயக்குனர் விக்னேஷ் பேசியிருக்கிறார், படத்தின் கதையா கேட்ட சந்தானம் நல்ல கதை என்று சொல்லவே, சந்தானத்திடம் அஜித் பேசி இப்படத்தில் நாம் ஒன்றாக நடிக்கிறோம் என்ற அன்புக்கட்டளையை சந்தானம் எதிர்பார்க்க வில்லை. இதற்கு பிறகு சந்தானத்திடம் லைகா ப்ரொடெக்ஷன்ஸ் தமிழ்குமரன் பேசியிருக்கிறார். இவரும் சந்தானமும் நெருங்கிய நண்பர்கள். இதனையடுத்து சந்தானமும் படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இப்படி மூன்று பக்கங்களிலும் அன்பால் தாக்கவே சந்தானம் அஜித்துடைய அன்பினால் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் AK62வில் சந்தானம் காமெடியனாக நடிக்கவில்லை என்றும் கதாநாயகனுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தானம் தற்போது “கிக்” என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் பெயரில்லாத ஒரு படத்திலும், அதற்கு பிறகு தில்லுக்கு துட்டு பாகம் 3லும் நடிக்கிறார் நடிகர் சந்தானம். மேலும் இப்பாதை இயக்குனர் ராம்பாலாவிற்கு பதிலாக வேறொருவர் இயக்குகிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Advertisement