பிரபல கோவிலில் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம் – அவர் மகன் எப்படி வளந்துவிட்டார் பாருங்க.

0
459
santhanam
- Advertisement -

பிரபல கோவிலில் தன் மகனுடன் நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்து இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் நகைச்சுவை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், சந்தானம் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக ஜொலித்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். சந்தானம் இறுதியாக ‘சபாபதி’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்த படமாக உருவாகி இருந்தது. ஆனால், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இந்த படத்திற்கு முன்பாக சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஜெயராஜ் வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

இதையும் பாருங்க : சித்ராவின் வழக்கு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிக்கை வைத்த ஹேம்நாத் – சித்ராவின் தந்தை வைத்த செக்.

ஏஜென்ட் கண்ணாயிரம் படம்:

தற்போது சந்தானம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இதனை தொடர்ந்து சந்தானம் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல கோவிலில் தன்னுடைய மகனுடன் சந்தானம் சாமி தரிசனம் செய்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயில்:

சமீபத்தில் நடிகர் சந்தானம் அவர்கள் கடலூர் செல்லும் வழியில் புதுச்சேரி சென்றார். அங்கு கிழக்கு கடற்கரை சாலை கருவடிகுப்பம் சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோயிலுக்கு வருகை தந்திருந்தார். அவரது ரசிகர் மன்றத்தினர் சந்தானத்தை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். பின் அங்கு கோயில் குருக்கள் சந்தானத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வந்தார்கள்.

மகனுடன் கோயிலுக்கு சென்ற சந்தானம்:

சந்தானத்துடன் அவரது மகனும் கோயிலுக்கு வந்திருந்தார். மேலும், கோயில் சிறப்புகள் குறித்து கேட்டு அறிந்த சந்தானம் அடிக்கடி கோயிலுக்கு வருவதாக உறுதி அளித்திருந்தார். சித்தானந்தர் என்ற சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். அவரது சமாதி மீது சிவலிங்கம் வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கோயிலுக்கு அருகில் தான் பாரதியாரின் குயில் தோப்பு இருந்தது. புதுச்சேரியில் பாரதியார் தங்கி இருந்தபோது குயில்தோப்பு வந்து தான் கவிதைகள் எழுதுவாராம்.

பாரதியார் சிலை:

அதுமட்டுமில்லாமல் தோப்புக்கு வரும் போதெல்லாம் மகாகவி பாரதியார் கோவிலுக்கு வந்து வழிபடுவார். அவருடைய நினைவாக பாரதியாருக்கு கோயில் வளாகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பலர் பாரதியார் சிலை முன்பு நின்று வழிபடுவதுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் சந்தானமும் பாரதியார் சிலையை வழிபட்டு புகைப்படம் எடுத்து இருக்கிறார்.

Advertisement