‘காசு இருக்குன்னு சில மூஞ்சிங்க’ லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சியை கிண்டல் செய்த ராதாரவி.

0
429
- Advertisement -

லெஜெண்ட் சரவணை நடிகர் ராதாரவி கழுவி ஊற்றி இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ராதாரவி. இவர் ஆரம்பத்தில் படங்களில் வில்லனாக நடித்திருந்தார். பின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக இவர் அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, ராதாரவி அவர்கள் பல சர்ச்சைகளை கூறி அடிக்கடி பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளும் நபராகவும் இருக்கிறார்.

-விளம்பரம்-
radharavi

திமுகவில் இருந்தபோது நயன்தாரா பற்றி இவர் கூறியிருந்த சர்ச்சை கருத்துக்களால் அந்த கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இருந்தாலும் இவர் பல சர்ச்சை கருத்துக்களை கூறிக் கொண்டு தான் வருகிறார். தற்போது இவர் பாஜகவில் இயங்கி வருகிறார். சமீபத்தில் நடத்திய கூட்டம் ஒன்றில் நம் நாட்டில் இரண்டு அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள். ஒன்று மோடி, இன்னொன்று அமிர்ஷா என்று அந்தக் கட்சியின் தலைவர்களை பற்றிய பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரபல கோவிலில் மகனுடன் சாமி தரிசனம் செய்த நடிகர் சந்தானம் – அவர் மகன் எப்படி வளந்துவிட்டார் பாருங்க.

இரவின் நிழல் சக்ஸஸ் மீட்:

இப்படி ஒரு நிலையில் தற்போது லெஜெண்ட் படத்தின் சரவணன் அருள் பற்றி மறுபடியும் ஒரு சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். அதாவது, நடிகர் ராதாரவி அவர்கள் இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட்டில் பார்த்திபனுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் பாரதிராஜா, கேஎஸ் ரவிக்குமார், அருள் மாதேஸ்வரன் போன்ற பலர் கலந்துகொண்டிருந்தனர். பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் தான் இரவின் நிழல். இது கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி அமோக வெற்றியை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இரவின் நிழல் படம்:

இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்று பார்த்திபன் கூறியிருந்தார். படம் வெளியானது முதலே பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். சமீபத்தில்கூட முதலமைச்சர் மு ஸ்டாலினை தனியாக அழைத்து இந்த படத்தை போட்டுக் காண்பித்து இருந்தார். அப்போது பார்த்திபன் இந்த படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜிஸ் சீனியர் என்பதை நிரூபித்து விட்டார் என்று முதலமைச்சர் பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

லெஜெண்ட் சரவணனை கழுவி ஊற்றிய ராதாரவி:

இதில் பேசிய நடிகர் ராதாரவி அவர்கள் கூறியிருந்தது, இந்த படத்தை பார்த்து இருக்காவிட்டால் நான் வாழ்க்கையில் மிகப்பெரிய ஒரு விஷயத்தை தவறவிட்டு இருப்பேன். பார்த்திபன் முகத்தை இரண்டு மணி நேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா? என்று கேள்விக்கு ஒத்த செருப்பு படம் பார்க்க வைத்தது. அதுதான் திறமை. ஆனால், தற்போது பணம் இருக்கு என்று சில மூஞ்சிகள் நடிக்க வரானுங்க. விளம்பரத்தை பார்த்து இவர் நடிக்க வருவான்னு அப்பவே ஒரு மேடையில் சொன்னேன்.

கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்:

அதே மாதிரியே வந்துட்டான்யா என்று சரவணன் அண்ணாச்சியை பற்றி பேசினார். இப்படி ராதாரவி பேசியிருக்கும் பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு உருவ கேலி செய்யும் இந்த பழக்கத்தை ராதாரவி எப்போது தான் விடுவார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். லெஜெண்ட் சரவணன் பற்றி ராதாரவி கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement