விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணியில் உருவாக இருந்த படம் குறித்து சந்தானம் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது . தமிழ் சினிமா உலகில் கவுண்டமணி, செந்திலுக்கு பிறகு காமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் வின் டிவி எனும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் மீடியாவிற்குள் நுழைந்தார்.
பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” என்ற நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே பிரபலமானார். ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை நிரூபித்த சந்தானத்திற்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் நடிகர் சந்தானம், குணால் நடித்த ‘ பேசாத கண்ணும் பேசுமே’ என்ற படத்தில் சிறு காட்சியில் தோன்றியிருப்பார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் தான் காதல் அழிவதில்லை படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இருந்தார்.
சந்தானத்தின் திரைப்பயணம்:
மேலும், இவர் கடந்த சில வாருடங்களாக சினிமாவில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், சமீப காலமாக சந்தானம் நடிப்பில் வெளியான சபாபதி, டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத், டகால்டி போன்ற படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை. பின் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான படம் குலு குலு. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி இருக்கிறார். இந்த படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை .
சந்தானம் நடிக்கும் படங்கள்:
சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த படம் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ . இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது இவர் “கிக்” என்ற படத்தில் நடித்துள்ளார். பின் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் பெயரில்லாத ஒரு படத்திலும், அதற்கு பிறகு தில்லுக்கு துட்டு பாகம் 3லும் நடிக்கிறார். இந்த நிலையில் விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணியில் உருவாகியிருந்த படத்தில் சந்தானம் நடிக்க இருந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்- விக்னேஷ் சிவன் கூட்டணி:
அதாவது, அஜித்- விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக இருந்த படம் ஏகே 62. இந்த படத்தின் கதை அஜித்திற்கு பிடித்து போய் ஓகே சொல்லிவிட்டார். இதனால் உற்சாகமாக விக்னேஷ் சிவன் படத்தின் வேலையில் மும்முறமாக ஈடுப்பட்டு இருந்தார். மேலும், இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து இருந்தது. அதோடு இந்த படத்தில் சந்தானம் நடிக்க அஜித்தே ஓகே சொல்லி இருந்தாராம். ஆனால், படத்தின் கதை தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போனதால் அஜித்- விக்னேஷ் சிவன் கூட்டணி கைவிடப்பட்டது.
Santhanam shares about his role in the Ajith Kumar-Vignesh Shivan Project for the first time!#Santhanam #AjithKumar #VigneshShivan #VikatanPressMeet pic.twitter.com/9eMCzVGuYV
— சினிமா விகடன் (@CinemaVikatan) July 20, 2023
சந்தானம் அளித்த பேட்டி:
இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் சந்தானம் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், விக்னேஷ் சிவனுடன் படம் பண்ணுவதாக இருந்தது உண்மைதான். படத்தின் கதை எல்லாம் பண்ணி விட்டு அந்த படத்தில் நான் நடிப்பதை அஜித் சாரை வைத்து பண்ணலாம் என்று தான் முடிவு செய்திருந்தோம். அதனால் தான் நானும் ட்விட்டரில் அதை பற்றி எதையும் பேசவில்லை. அதற்குப் பிறகு சில காரணங்களால் அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. இப்போதும் அந்த படத்தின் கதை தயாராக தான் இருக்கிறது. அந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம், கெட்டப் எல்லாம் சூப்பராக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பண்ணலாம். என்று கூறியிருந்தார்.