இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்.! இவர் தான் ஹீரோவாம்.! அவரே சொன்ன தகவல்.!

0
415
santhanam

காமெடியனாக திரையுலகில் கால் பதித்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இந்நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’சர்வர் சுந்தரம்’, ’சக்கப்போடு போடு ராஜா’, ’மன்னவன் வந்தானடி’, ’ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. 

இந்தப் படங்கள் பற்றி பேசிய சந்தானம், ’சக்கப்போடு போடுராஜா படத்தில் விவேக்கும் என்னுடன் நடிக்கிறார். இதில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்பதால் காமெடி கேரக்டரில் நடிக்க வேறொருவரை நடிக்க வைக்க நினைத்தோம். அப்படித்தான் விவேக்கிடம் பேசினோம். அவர் உடனே ஒப்புக்கொண்டு நடித்தார்.

- Advertisement -

எங்களின் டைமிங் சென்ஸ் படத்துக்கு பலமாக இருக்கும். ’சர்வர் சுந்தரம்’ படம் சமையல் கலைஞனை பற்றிய கதை. படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, கேட்டரிங் படித்திருப்பவர். அதனால் இந்த கதையை அவரால் மட்டுமே இயக்க முடியும். அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள ’மன்னவன் வந்தானடி’ படத்தின் 80 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டது.

உங்கள் எதிர்காலம் திட்டம் என்ன என்று கேட்கிறார்கள். எதிர்காலத்தில், என்னை நீங்கள் இயக்குனராக பார்க்கலாம். சில கதைகள் எழுதி வைத்திருக்கிறேன்.அதுவும் ஆர்யாவை வைத்து தான் படம் இயக்குவேன். அது காமெடி படமா இல்லை வேறுவகை படமா என்பதை இப்போது சொல்ல முடியாதுஎன்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement