தன் வேலைக்காரியை தள்ளி விட்ட தனுஷ் பட நடிகை – வீடியோவை கண்டு கடுப்பான ரசிகர்கள். ஏன் பாருங்க.

0
496
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் சாரா அலி கான். பட்டோடி மற்றும் தாகூர் குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர்கள் அமிர்தா சிங் மற்றும் சைப் அலிக்கான் ஆகியோரின் மகள் ஆவார். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சயீப் அலிகானின் மகள். அதாவது சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் தான் சாரா அலி கான். கடந்த சில வருடங்களுக்கு முன் அலி தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிட்டார். அதன் பின்னர் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை பல வருடங்களாக காதலித்து வந்தார் . அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

விகாரத்துக்கு பின்னரும் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளான சாராவை கவனித்து கொள்கிறார் சைப் அலிகான். மேலும், சாரா அலி கான் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற பிறகு 2018 ஆம் ஆண்டில் கேதார்நாத் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘அத்ரங்கி ரே ‘ என்ற படத்தில் சாரா அலி கான் நடித்து இருந்தார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் தனுஷ் அக்ஷய்குமார் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

அத்ரங்கி ரே படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. அதோடு இந்த திரைப்படம் தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் அவர்கள் மதுரையை சேர்ந்த இளைஞனாக நடித்தார். இந்த படத்தின் கதை வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் படத்தின் பாடல்கள் எல்லாம் ரிலீசுக்கு முன்பே ரசிகர்களை கவர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளத்தில் சாரா அலிகான் :

மேலும், இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை வெற்றி இருந்தது. இந்த படத்திற்கு பிறகு சாரா அலி கான் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் என்றே சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோ ஷூட் புகைப்படம்,வீடியோக்களை பகிர்ந்து வருவார். அதோடு தன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

-விளம்பரம்-

சாரா அலிகான் பதிவிட்ட வீடியோ:

அந்த வகையில் தற்போது நடிகை சாரா அலி கான் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர், நீங்கள் செய்த மோசமான பிராங்க் எது? என்று கேட்டிருக்கிறார். அதற்கு சாரா அலி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சாரா அலிகான் ஸ்பாட் கேர்ளை மிக மோசமாக நீச்சல் குளத்தில் பிடித்து தள்ளிவிட்டு இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து சாரா அலிகான் கூறியது, என் வாழ்க்கையில் மிக மிக மோசமான பிராங்க் என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.

சாரா அலிகானை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்:

மேலும், இதை பார்த்த சமூக வலைவாசிகள் இதனை கடுமையாக திட்டி கொண்டு வருகிறார்கள். அதிலும் சிலர், இது காமெடி இல்லை. உங்களிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சாரா கேவலமான செயல். உங்களுக்கு ஜாலியாக இருக்க அந்த பெண்ணை அதிர்ச்சி அடைய செய்வீர்களா? நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்று கண்டமேனிக்கு நடிகை சாரா அலி கானை விளாசி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதற்கு சாரா அலி கான் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement