நடிகை சரண்யா பொன்வண்ணன் அழகான இரண்டு மகள்கள் ! புகைப்படம் உள்ளே !

0
7157
- Advertisement -

ஒரு காலத்தில் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர் சரண்யா பொன்வண்ணன். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

Saranya Ponvannan

- Advertisement -

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா.

இவருடைய மகள் பிரியதர்ஷினி தற்போது சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இன்னும் சில வருடங்களில் ஒரு கைதேர்ந்த டாக்டர் ஆகிவிடுவார் பிரியதர்ஷினி. இரண்டாவது மகள் சாந்தினி இவர் படிப்பில் மிகவும் சுட்டி.

-விளம்பரம்-

Saranya-Ponvannan-1

இவர் தற்போது பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் செம்மையாக படித்து ஒரு சைன்டிஸ்ட்டாக வேண்டும் என ஒற்றை காலில் நிற்கிறார். மேலும் விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார் சரண்யா. படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்துள்ளார் இந்த மகராசி சரண்யா பொன்வண்ணன்.

Saranya-Ponvannan-daughter

Saranya Ponvannan with her Daughters @ Thalaiva Audio Launch Stills

அதனுடன் சேர்த்து தன் மகள்களை கண்டிப்பாக நடிக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் பார்க்க இருவரும் ஹீரோயின்கள் போலவே உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் இருவரும் நடிக்க வருகின்றனரா என..!!!!

Advertisement