‘நிறைய பேரிடமும் பிரச்சனை தான்’ – சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாக வெளியான செய்தி குறித்த உண்மை.

0
107
- Advertisement -

சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விசாரணையில் போலீஸ் அளித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சரண்யா பொன்வண்ணன். இவர் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் தான் குடியிருக்கிறார். இவருடைய வீட்டுக்கு பக்கத்தில் ஸ்ரீதேவி என்பவர் இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் ஸ்ரீதேவி தன்னுடைய கேட்டை திறந்த போது சரண்யாவின் காரை உரசுவது போல் சென்றிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சரண்யா அவருடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த கேட் 20 அடி நீளம் இருக்கிறது. கேட்டை திறந்த உடனே அப்போது வெளியில் இருந்த சரண்யாவின் காரை ஸ்ரீதேவியின் இரும்பு கேட் வேகமாக நகர்ந்து உரசுவது போல் வந்திருக்கிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி சரண்யா குடும்பத்தினர் ஸ்ரீதேவி மீது மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதனை அடுத்து சரண்யா குடும்பத்தினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சரண்யா தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து தன்னை மிரட்டியதாக சிசிவி காட்சி ஆதாரங்களையும் புகாரில் இணைத்து இருக்கிறார் ஸ்ரீதேவி.

- Advertisement -

சரண்யா மீது புகார்:

இதை அடுத்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை செய்த விருகம்பாக்கம் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கூறியிருப்பது, ஸ்ரீதேவி அளித்த புகாரின் அடிப்படையில் சரண்யா பொன்வண்ணன் குடும்பத்திடம் விசாரணை நடத்தினோம். அதில் சரண்யா பொன்வண்ணன் வீட்டிற்கு வருபவர்களிடம் ஸ்ரீதேவி குடும்பத்தார் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டினார்கள். கடந்த மார்ச் 31ஆம் தேதி சரண்யா மகளும், உறவினரும் தங்களுடைய காரை நிறுத்தி இருந்தார்கள்.

போலீஸ் விசாரணை:

அப்போது ஸ்ரீதேவினுடைய கணவர் வேண்டும் என்று அவரின் வீட்டு கேட்டை வேகமாக திறந்து காரை இடித்து இருக்கிறார். ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று சரண்யா உறவினர்கள் கேட்டதற்கு, என் வீட்டு கேட்டு. நான் அப்படிதான் திறப்பேன் என்று பேசுகிறார். அப்போது ஸ்ரீதேவி மகனும் வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் ஸ்ரீதேவி, டேய் அப்படிதாண்டா இடிப்பேன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார். இதனால் சரண்யாவின் உறவினருக்கும் ஸ்ரீதேவி குடும்பத்திற்கும் இடையே நிறைய வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஆனத.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி செய்த வேலை:

மேலும், ஸ்ரீதேவி ரொம்ப அசிங்கமான வார்த்தைகளால் பேசி இருக்கிறார். இன்னொரு பக்கம் சரண்யா உறவினரும் கோபத்தில் பதிலுக்கு பேசி இருக்கிறார்கள். வெளியில் ஏதோ சத்தம் கேட்டுப் போய் தான் பொன்வண்ணனும் சரண்யாவும் வெளியில் வந்து பார்த்திருக்கிறார்கள். ஏன் எதற்கெடுத்தாலும்? இப்படி பிரச்சனை பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சரண்யா பேசிவிட்டு அவருடைய மகளையும் உறவினரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.

விசாரணையில் தெரியவந்தது:

உடனே வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளை எடுத்துக்கொண்டு சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததார்கள் என்று புகார் கொடுத்து விட்டார் ஸ்ரீதேவி. புகார் அளித்த ஸ்ரீதேவி சரண்யா குடும்பத்தினர் மட்டுமில்லாமல் நிறைய பேரிடமும் பிரச்சனையில் ஈடுபட்டிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பின் நாங்கள் ஸ்ரீதேவி மீது தான் தப்பியிருப்பதை தெரிந்து கொண்டு அவரை எச்சரித்து அனுப்பி இருக்கிறோம். உண்மையில் இதுதான் நடந்தது. சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார் என்று சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement