ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை, சரத்குமார் வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?

0
368
sarathkumar
- Advertisement -

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டை தடை செய்ததற்கு நடிகர் சரத்குமார் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாட்டு பலருடைய வாழ்க்கையை சூறையாடிக் கொண்டு வருகின்றது. இந்த விளையாட்டின் மூலம் பலர் பணத்தை இழந்தும், தற்கொலை செய்தும் இருக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

-விளம்பரம்-
sarathkumar

ஆனால், இந்த விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் தான் நடித்து மக்கள் மத்தியில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இந்த ரம்மி சர்கிள் விளையாட்டு விளம்பரத்தில் நடிகர் சரத்குமார் நடித்து இருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது சரத்குமார் கூறியது, சரத்குமாரால் தான் நிறைய பேர் கெட்டுப் போகிறார்கள் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் வந்திருந்தது.

- Advertisement -

எல்லோரும் லட்சக்கணக்கில் கிரெடிட் கார்டை வைத்துக் கொண்டுதான் விளையாடுகிறீர்களா? இல்லை எல்லோரும் நான் விளம்பரத்தில் நடித்ததினால் தான் வீடு வாசலை இழக்கிறீர்களா? நான் சொல்றதுக்காக தான் விளையாடுகிறீர்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கெட்டுப் போகிறவன் என்று நினைத்தால் அவன் எப்படி இருந்தாலும் கெட்டுதான் போவான். விடுமுறை நாட்களில் மரத்தடியில் ஆங்காங்கே சீட்டுக்கட்டுகளை வைத்துக்கொண்டு விளையாடிகிறார்கள். அங்கேயும் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம் குறித்து சரத்குமார் சொன்னது:

இது எல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு கடுமையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தை அமல்படுத்தி அதற்கு பிறகும் நான் தான் காரணம் என்று சொன்னால் ஏற்று கொள்கிறேன். நான் இந்த விளம்பரத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்னாலே நடித்தேன். அதை இப்போதுதான் வெளியிடுகிறார்கள். அப்போதே அவசர சட்டம் வந்திருந்தால் நான் நடித்திருக்க மாட்டேன்.

-விளம்பரம்-

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்:

நீங்களாக கெட்டுப் போவதற்கெல்லாம் நான் பொறுப்பல்ல என்று சரத்குமார் பேசி இருக்கும் சர்ச்சை பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை எடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரம் பயங்கரமாக வைரலாகி இருந்தது. பின் பல கட்ட அழுத்தங்களுக்கு பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் வழங்கியிருந்தார். தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது.

Sarathkumar

சரத்குமார் வைத்த கோரிக்கை:

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழகத்தில் அமிலுக்கு வந்ததை குறித்து சரத்குமார் கூறியிருந்தது, சூதாட்டத்துக்கு தடை என்று சொல்லும் போது அனைத்து விதமான சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும். முக்கியமாக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் ஆபாச இணையங்களை முடக்க வேண்டும். இதை நான் அரசுக்கு கோரிக்கையாகவே வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement