ஜாக்லினை திட்டி தீர்த்த புகழ் ரசிகர்கள் – கடுப்பாகி ஜாக்லின் வெளியிட்ட வீடியோ.

0
2277
Jackline
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிசமீபத்தில் நிறைவடைந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ் பற்றி சொல்லவா வேண்டும். இப்படி ஒரு நிலையில் புகழின் ரசிகர்கள் ஜாக்லினை திட்டி தீர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : தனது அம்மாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்த அனிதா – பிக் பாஸ்ல சொன்ன மாதிரி நிஷா மாதிரியே தான் இருக்காங்க.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தேன்மொழி’ தொடரில் நடித்து வருகிறார். அது போக சொந்தமாக இவர் தனது பெயரில் யூடுயூப் சேனல் ஒன்றையும் நடித்தி வருகிறார்.

வீடியோவில் 4 : 05 நிமிடத்தில் பார்க்கவும்

இப்படி ஒரு நிலையில் இவரை கடந்த சில நாட்களாக புகழின் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றில் புகழை சுத்தமாக பிடிக்காது என்று வேடிக்கையாக சொன்னது தான். இதனால் ரசிகர்கள் பலர் புகழை பிடிக்காது ஆனால், அவர் ரசிகர்கள் மட்டும் உங்களுக்கு வேண்டுமா என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு தனது யூடுயூப் சேனலில் பதில் அளித்துள்ள ஜாக்லின், புகழை எனக்கு ஏன் பிடிக்காது. அவன் என் நண்பன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement