தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு அரசியல் வாதியும் ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார். அதுமட்டுமில்லாமல் இவர் முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவரும் ஆவார். இவர் ஆரம்பத்தில் படங்களில் எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தார். பின் சரத்குமார் படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவந்த படம் ஏய். இந்த படத்தை வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இந்த படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் சரத்குமார், நமீதா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.
இதையும் பாருங்க : மகன் பிறந்த கையோடு அவரின் பெயரையும் அறிவித்த சஞ்சீவ்-ஆல்யா. என்ன பெயர் தெரியுமா ?
அர்ஜுனா அர்ஜுனா பாடல் :
இந்த படம் வெற்றியடைந்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜுனா அர்ஜூனா’ பாடல் செம ஹிட். அதற்கு முக்கிய காரணம் இந்த பாடலில் நமீதா காண்பித்த கவர்ச்சி என்றே சொல்லலாம். இந்நிலையில் சரத்குமார் அவர்கள் ஏய் படத்தில் நடித்த அர்ஜுனா அர்ஜுனா பாட்டு குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,
நமீதா தொப்புளில் தண்ணி எடுத்த சரத் :
நான் ஏய் படத்தில் நடித்த போது சுந்தரம் மாஸ்டர் தான் அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடலை இயக்கினார். அப்போ சுந்தரம் மாஸ்டர் ரொம்ப கஷ்டப்பட்டார். நான் அந்த நேரத்தில் இமேஜ் எல்லாம் பார்த்து தான் நடித்து வந்தேன். அப்போது அர்ஜுனா அர்ஜுனா பாடலில் நமீதா தொப்புளில் முத்தம் கொடுக்கற மாதிரியும், வாய்யில் இருந்து தண்ணிர் வர மாதிரி எல்லாம் காட்சி வரும்.
மாஸ்டர் சொல்லியும் மறுத்த சரத் :
நான் இதெல்லாம் ஓவராக இருக்கு என்றும், எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு மாஸ்டர் என்றும் சொன்னேன். உடனே அவர் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள். இது எல்லாம் படத்துக்கு நல்லா இருக்கும். மக்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என்று சொன்னார். அதனால் நான் நடித்தேன். ஆனால், இப்ப என் பையன் பார்த்து இது என்ன டாடி? என்று கேட்கிறான். இப்ப நினைத்தால் ஏன் நடித்தோம் என்று தோணுகிறது.
மகன் கேட்ட கேள்வி :
இது தேவையா? என்று தோணும். அதோடுஅந்த பாட்டு வந்ததாலே நான் டிவியை ஆப் பண்ணிட சொல்லுவேன். பின் வேற பாட்டு பாருங்க என்று சொல்லி விடுவேன் என்று கூறினார். இப்படி இவர் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது சரத்குமார், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். மேலும், பாம்பன், பிறந்தால் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.