சரத்குமாரின் 150வது படம் – எப்படி இருக்கு ‘ஸ்மைல் மேன்’? – விமர்சனம் இதோ

0
152
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சரத்குமார். தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தி ஸ்மைல் மேன். இது இவருடைய 150ஆவது படம். இந்த படத்தை ஷியாம் பிரவீன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார் உடன் ஸ்ரீகுமார், சிஜா ரோஸ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை மேக்னம் மூவிஸ் தயாரித்திருக்கிறது. கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சரத்குமார் சிபிசிஐடியில் உயர் அதிகாரியாக இருக்கிறார். ஒரு முறை குற்றவாளியை பிடிக்கும் போது விபத்தில் சிக்கிய இவருக்கு அடிபடுகிறது. இதனால் சில வருடங்கள் சரத்குமார் ஓய்வில் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த விபத்தினால் இவர் அல்சைமர் என்ற ஞாபக மறதி நோயால் பாதிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் 5 வருடங்கள் முன்பு நடந்தது போல் ஸ்மைல் மேன் சீரியல் கொலைகள் தற்போதும் நடந்து கொண்டிருக்கின்றது.

- Advertisement -

இந்த வழக்கை புதிய அதிகாரியான ஸ்ரீகுமார் விசாரிக்கிறார். பின் இந்த வழக்கிற்காக சரத்குமாரை மீண்டும் வேலையில் வந்து சேர அழைப்பு விடுக்கப்படுகிறது. பின் அவருடைய தலைமையில் ஒரு குழு ஆரம்பிக்கிறார்கள். அதற்கு பின் தொடர்ந்து நடக்கும் கொலைகளுக்கு காரணம் என்ன? அந்த கொலையாளி யார்? சரத்குமார் அவர்களை கண்டுபிடித்தாரா?இல்லையா? ஞாபக மறதி நோயினால் அவருக்கு என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை.

இது சரத்குமார் உடைய 150 வது படம். இந்த படம் முழுக்க சரத்குமார் சுமந்து சென்றார் என்று சொல்லலாம். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் அழுத்தமாக பேசப்பட்டிருக்கிறது. இவர்தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். இவரை அடுத்து வழக்கை விசாரிக்க வரும் அதிகாரியாக ஸ்ரீகுமார் தனக்கு கொடுத்த வேலை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார். இவருடன் படத்தில் வரும்மற்ற நடிகர்களும் தங்களுடைய வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். ஆனால், சில காட்சிகளில் வரும் காமெடிகள் தான் படத்திற்கு செட் ஆகவில்லை.

-விளம்பரம்-

கிரைம் கில்லர் பாணியில் இயக்குனர் கதைக்களத்தை எடுத்திருக்கிறார். ஆனால், அதை கொண்டு சென்ற விதத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். முதல் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது. ஆனால், இடைவெளிக்கு பிறகு வரும் பிளாஷ்பேக் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இயக்குனர் வைத்திருக்கும் சஸ்பென்ஸ் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

சரத்குமார் நடிப்பு

கதைக்களம் ஓகே

பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது.

இரண்டாம் பாதி அருமை

குறை:

முதல் பாதி பொறுமையாக செல்கிறது

காமெடிகள் சலிப்பை ஏற்றி இருக்கிறது

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் தி ஸ்மைல் மேன் – சீரியஸ் மேன்

Advertisement